For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆல்ப்ஸ் மலையை குடைந்து அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை- சுவிட்சர்லாந்தில் திறப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சுவிட்சர்லாந்து: உலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை சுவிட்சர்லாந்தில் திறக்கப்படவுள்ளது. ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 57 கிலோ மீட்டர் நீளத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கபாதை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

1947ல் வடிவமைப்புடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சுரங்கப்பாதை 70 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

காட்தர்டு பேஸ் சுரங்கம் என்ற பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி ரயில் பாதையின் நீளம் 57 கிலோ மீட்டர்கள் ஆகும். இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் 53 கிலோமீட்டர் நீளம் கொண்ட செய்கன் என்ற சுரங்க வழி ரயில் பாதை உலகின் மிக நீளமான சுரங்க வழி ரயில் பாதையாக இருந்தது.

சுரங்க ரயில்பாதை

சுரங்க ரயில்பாதை

சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று திறக்கப்பட உள்ளது. இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

70 ஆண்டுகால வரலாறு

70 ஆண்டுகால வரலாறு

இந்த சுரங்கப்பாதைக்கான தோராயமான வடிவமைப்பு முதன் முதலில் 1947ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கர்ல் எட்வேர்டு கார்னர் வெளியிட்டார்.

ஆல்ப்ஸ் மலைத்தொடரில்

ஆல்ப்ஸ் மலைத்தொடரில்

ஆல்ப்ஸ் மலைத் தொடரில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஸூரிச் மற்றும் மிலன் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 40 நிமிடங்கள் வரை குறையும்.

12 பில்லியன் பிராங்க்

12 பில்லியன் பிராங்க்

2,400 பணியாளர்களை கொண்டு சுமார் 12 பில்லியன் பிராங்க் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை சுவிஸின் உறி மாகாணத்தில் உள்ள எர்ஸ்ட்பெல்டு என்ற பகுதியில் தொடங்கி, டிசினோ மாகாணத்தில் உள்ள போடியோ என்ற பகுதியில் நிறைவடைகிறது.

கோலாகல திறப்பு விழா

கோலாகல திறப்பு விழா

இன்று ரயில் சுரங்கப்பாதையின் கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டே, இத்தாலி பிரதமரான மேட்டோ ரென்ஸி ஆகிய தலைவர்களுடன் சுவிஸ் நாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் பங்கேற்க உள்ளனர்.

டிசம்பர் முதல் சேவை

டிசம்பர் முதல் சேவை

ரயில் சுரங்கப்பாதை இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கான சேவை அனைத்தும் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The world's longest train tunnel will officially open today, nearly seven decades after the initial design was conceived.Switzerland's 57-kilometre (35-mile) Gotthard Base Tunnel runs under the Alps from Erstfeld in the central canton of Uri, to Bodio in the southern Ticino canton.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X