For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவில் இரட்டை தலைமைதான்...சசிகலா, தினகரனுக்கு இடமில்லை - சொல்வது கடம்பூர் ராஜூ

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வருவது நடக்காத காரியம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

கோவில்பட்டி: ஜெயலலிதாவிடம் பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான் என்பதனை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்காக கட்சியில் சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார் கடம்பூர் ராஜூ.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமமுகவினர் மீது அதிமுக அம்மா பேரவை துணை செயலாளர் மாறன் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அமமுக தொண்டர்கள் 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை.. மதுரை மருத்துவர் சஸ்பெண்ட்மருத்துவமனைக்கு வந்த பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை.. மதுரை மருத்துவர் சஸ்பெண்ட்

அமமுகவினருக்கு கண்டனம்

அமமுகவினருக்கு கண்டனம்

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கடம்பூர் ராஜூ, சென்னையில் ஜெயலலிதா நினைவு இடத்தில் நேற்று அநாகரீகமான வகையில் அமமுகவினர் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

மரியாதை இல்லாதவர்கள்

மரியாதை இல்லாதவர்கள்

ஜெயலலிதா நினைவு நாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டிய நேரத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவிடம் பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார் கடம்பூர் ராஜூ.

நிரந்தர பொதுச்செயலாளார் ஜெயலலிதா

நிரந்தர பொதுச்செயலாளார் ஜெயலலிதா

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து உள்ளது. அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான் என்பதனை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்காக கட்சியில் சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என்றும் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இடமில்லை

அதிமுகவில் இடமில்லை

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வருவது நடக்காத காரியம் என்று கூறிய கடம்பூர் ராஜூ, சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

English summary
Kadambur Raju has said that only those who do not have affection and respect for Jayalalithaa will engage in such acts. Party executives and volunteers have acknowledged that the AIADMK is no longer a dual leadership. Kadambur Raju has said that a legal amendment has been brought in the party for this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X