For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலைஞர் டிவி ரூ.113 கோடி; டி.டி., கல்லூரி ரூ.1,200 கோடி: வரி பாக்கிக்காக வருமான வரி நோட்டீஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Kalaignar TV slapped with Rs 113cr I-T notice
சென்னை: கலைஞர் 'டிவி' மற்றும் டி.டி., மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின், வரி பாக்கிக்காக, இறுதி கட்ட நோட்டீசை வருமான வரித்துறை அனுப்பியுள்ளது.

கலைஞர் 'டிவி' 113 கோடி ரூபாயும், டி.டி., மருத்துவக் கல்லூரி 1,200 கோடி ரூபாயும், வரி செலுத்த வேண்டும் என, நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் ஆய்வுகள் முடிந்து இறுதி கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதால், நோட்டீசை எதிர்த்து, இரு நிறுவனங்களும் மேல்முறையீடு செய்யும் என, தெரிகிறது.

கலைஞர் 'டிவி' நிறுவனம், 2011- 12ல், செலுத்த வேண்டிய வருமான வரிக்காக முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு, அந்நிறுவனம் அளித்த விளக்கங்கள் மற்றும் வருமான வரித்துறையின் ஆய்வுகளைத் தொடர்ந்து, '113 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது' என, இறுதி கட்ட உத்தரவை, நோட்டீசாக வருமான வரித்துறை அளித்துள்ளது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டி.டி., மருத்துவக் கல்லூரி, 1,200 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வருமான வரித்துறை மூத்த அதிகாரி கூறுகையில், வருமான வரி பாக்கிக்காக, ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்புவோம்; அதற்குரிய பதிலையோ, மறு ஆய்வையோ அந்நிறுவனம் கேட்கலாம்; கேட்காமலும் இருக்கலாம். இதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் வரவு, செலவுகளை முழுமையாக இறுதி செய்து இறுதி கட்ட உத்தரவு அனுப்பப்படும்.

கலைஞர் 'டிவி'க்கும், டி.டி., மருத்துவக் கல்லூரிக்கும் இறுதி கட்ட உத்தரவை அனுப்பியுள்ளோம். இதன் மூலம், அந்நிறுவனங்கள் வரி செலுத்துவதை வருமான வரித்துறை இறுதி செய்துவிட்டது என பொருள். இத்தொகை குறித்து மேல்முறையீடு செய்ய நிறுவனங்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறினார்.

English summary
Kalaignar TV, a regional language television broadcaster, promoted by the DMK first family, has been served a Rs 113 crore income tax notice for the assessment year 2011-12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X