காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

படுக்கையை விட்டு தந்த நர்ஸ் பவானி.. கல்யாண நாளன்றே பிரிந்த உயிர்.. சாகும் தருவாயிலும்.. காஞ்சி சோகம்

ஆக்சிஜன் படுக்கையை விட்டுத்தந்த நர்ஸ் உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: ஆஸ்பத்திரியில் தன்னுடைய ஆக்சிஜன் படுக்கையை சக நோயாளிக்கு விட்டுக் கொடுத்த நர்ஸ் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.. இது சென்னை, காஞ்சிபுர மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் 9-வது மண்டலத்தில் உள்ள துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக வேலை பார்த்து வந்தவர் பவானி.. கடந்த சில மாதங்களாகவே இவர் டியூட்டியில் ஈடுபட்டு வந்தார்.

 உருமாறிய கொரோனாவையும் அழிக்கும் கோவாக்சின்.. ஆனாலும் WHO-இன் ஒப்புதல் தாமதம் ஆவது ஏன்? முழு விவரம் உருமாறிய கொரோனாவையும் அழிக்கும் கோவாக்சின்.. ஆனாலும் WHO-இன் ஒப்புதல் தாமதம் ஆவது ஏன்? முழு விவரம்

ஆனால், கடந்த ஏப்ரல் 22-ம்தேதி தொற்று பாதித்துவிட்டது.. அதனால், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்... 5 நாட்கள் அங்கு சிகிச்சை தரப்பட்டது.. அதன்பிறகு, ஏப்ரல் 26ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தார் நர்ஸ் பவானி.

 படுக்கை

படுக்கை

எனினும் தொற்று முழுமையாக குணமாகவில்லை.. அதனால், உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டது.. ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்துவிடவும், ஏப்ரல் 28ம் தேதியே மறுபடியும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்... ஆனால், ஆக்சிஜன் படுக்கை அவருக்கு கிடைக்கவில்லை.. பெரும் அவதிக்கிடையில்தான் படுக்கை கிடைத்துள்ளது.. ஆனால் அதற்குள் நிலைமை இன்னும் மோசமானது.

 சிகிச்சை

சிகிச்சை

"80 சதவீத நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது.. காப்பாற்றுவது கஷ்டம்.. இருந்தாலும் முயற்சிக்கிறோம்" என்று டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.. சிகிச்சையும் தொடர்ந்து தரப்பட்டுள்ளது.. ஓரளவு உடல்நிலையில் முன்னேற்றமும் ஏற்பட்டது.. இந்த சமயத்தில்தான், அதே ஆஸ்பத்திரியில் மிக மிக மோசமான நிலைமையில், உயிருக்கே ஆபத்தான நிலையில் பலர் படுக்கை கிடைக்காமல் ஆஸ்பத்திரிக்கு வெளியே அவதிப்பட்டு கொண்டிருப்பதை கவனித்தார் நர்ஸ் பவானி.

 மூச்சுதிணறல்

மூச்சுதிணறல்

இதையடுத்து தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை, சக நோயாளிக்கு கொடுத்து விட்டு, கடந்த மே 12ம் தேதி வீட்டிற்கு வந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். ஆனால், வீட்டுக்கு வந்தும்கூட அவரது உடல்நிலை தேறவில்லை.. மூச்சு திணறல் திடீரென ஏற்பட்டு, கடந்த 19-ம் தேதி பவானி இறந்துவிட்டார்.

 சக நோயாளி

சக நோயாளி

இதில் சோகம் என்னவென்றால், பவானியின் கணவர் கஜேந்திரன் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து விஆர்எஸ் வாங்கியவர்.. அவரும் கடந்த வருடம் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.. இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், தன்னுடைய கல்யாண நாளன்றுதான் நர்ஸ் பவானி இறந்துள்ளார்.. சாகும் தருவாயிலும், சக நோயாளிக்கு படுக்கையை விட்டுத்தந்த பவானியின் மனிதநேயத்தை நினைத்து, உறவினர்கள் கலங்கியபடியே உள்ளனர்..!

English summary
Kancheepuram Nurse died due to corona before leaving a bed for a covid19 patient
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X