எதிர்ப்பு கிடக்கட்டும்! பாரபட்சமற்ற சனாதன கலாசாரத்தை இளைஞர்களே- பின்பற்றுங்க.. ஆளுநர் ஆர்.என்.ரவி
காஞ்சிபுரம்: அனைவரையும் உள்ளடக்கிய பாரபட்சமற்ற சனாதான கலாசாரத்தை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
சனாதன தர்மம் என்பது மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அது நியாயப்படுத்துகிறது; அதனால் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி முதல் ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். "இந்தியா" கூட்டணி தலைவர்களும் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது.

இந்த பேச்சுக்காகத்தான் உதயநிதியின் தலையை வெட்ட வேண்டும்; நாக்கை அறுக்க வேண்டும் எனவும் சில சாமியார்கள் பரிசு தொகை அறிவித்திருந்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சு குறித்த வழக்கில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது ஏன் இன்னமும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். இதனை முன்வைத்து ஆளும் திமுக அரசை பாஜக கடுமையாக விமர்சிக்கிறது. ஆனாலும் சனாதனத்தை எந்நாளும் எதிர்ப்போம்; இது பல நூற்றாண்டுகால பிரச்சனை; எத்தனை வழக்குகள் வந்தாலும் எதிர்கொள்வோம் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதனையும் தற்போது பாஜக கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழாவில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இப்பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது: நீ, நான் என்கிற தத்துவம் எதுவும் இல்லை. நாம், நாங்கள் என்பதுதான் தத்துவம். உலகில் எந்த ஒரு தத்துவமும் இதனை போதித்தது இல்லை. உலகில் நடைபெறும் இன்றைய மோதல்களுக்கான விடையும் இதில்தான் இருக்கிறது. இது ஒரு மந்திர சொல். உலகத்துக்கு நமது பாரதம் நன்கொடையாக அருளியிருக்கிறது. ஆனால் சிலர் தவறான புரிதல்களுடன் சனாதன தர்மத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம் இளைஞர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளுடன் தன்னம்பிக்கை மிக்க ஒரு புதிய பாரதம் உதயமாகி வருகிறது. பட்டதாரி மாணவர்கள் அதை உணர்ந்து தங்கள் பெரிய கனவுகள், கடின உழைப்பு, தன்னம்பிக்கையுடன் பாரதத்தின் எழுச்சியை விரைவுபடுத்த தங்கள் தேசிய கடமைகளை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். பாரதத்தை ஒரே குடும்பமாகப் பார்ப்பவர்களாகவும் மனித குலத்துக்கு பாதுகாப்பான, மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் கொண்டிருக்கும் நம் அனைவரையும் உள்ளடக்கிய பாரபட்சமற்ற சனாதன கலாசாரத்தைப் பின்பற்றும் பெருமிதமிக்கவர்களாக நமது இளைஞர்கள் இருக்க வேண்டும்
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications