வேட்டியை அவுத்து விட்றாதீங்க.. பயமா இருக்கு.. கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்து மிரண்ட ஜி.பி.முத்து!
கன்னியாகுமரி: டிக்டாக் மூலம் பிரபலமடைந்து தற்போது யூ டியூபில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜி.பி.முத்து, குமரியில் தன்னை காண வந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்டு மிரண்டு போய்விட்டார்.
வேட்டியை அவுத்து விட்றாதீங்க நண்பர்களே.. பயமா இருக்கு.. என தனக்கே உரிய வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார்.
திரை நட்சத்திரங்களுக்கு இணையாக ஜி.பி.முத்துவுக்கு அவர் செல்லும் இடங்களிலெல்லாம் ரசிகர் பட்டாளம் திரண்டு விடுகிறது.

ஜிபி முத்து
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜிபி முத்து, டிக்டாக் மூலம் சமூக வலைதளங்களில் அடியெடுத்து வைத்து இன்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடும் அளவுக்கு யூ டியூப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். பிரபல திரை நட்சத்திரங்களுடன் போட்டிபோடும் அளவுக்கு ஜிபி முத்துவின் புகழ் வெளிச்சம் தமிழகம் முழுவதும் படர்ந்து விரிந்துள்ளது. தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்கள் என திரையுலகில் அடியெடுத்து வைத்து இவர் கன்னியாகுமரியில் நடைபெற்ற கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார்.

பயமாக இருக்கு
அப்போது தன்னைக் காண கட்டுங்கடங்காத கூட்டம் திரண்டதை கண்டு மிரண்டு போன ஜிபி முத்து, வேட்டியை அவுத்து விட்றாதீங்க நண்பர்களே.. பயமா இருக்கு.. என வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் தனக்கு அந்நிய மாவட்டம் கிடையாது என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தாம் பெண் எடுத்திருப்பதால் தனது மாமியார் மாவட்டம் எனப் பேசி அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தார்.

பேமஸ் டயலாக்
இதனிடையே தலைவரே உங்க பேமஸ் டயலாக்கை பேசுங்க தலைவரே என ஜிபி முத்துவுக்கு அவரது ரசிகர்கள் கோரஸாக குரல் எழுப்ப, செத்தப்பயலே நாரப்பயலே எனப் பேசி அவர்கள் ஆசையை நிறைவேற்றினார். லட்சம் லட்சமாக பணம் கொடுத்து திரை பிரபலங்களை அழைத்து வந்து கடை திறப்பு விழா நடத்தியவர்கள் பலரும், பயணச் செலவை மட்டும் கவனித்துக் கொண்டு ஜிபி முத்துவை அழைத்து வந்து திறப்பு விழா வைபங்களை நடத்த ஆரம்பித்துள்ளார்கள்.

திரைப்படம் வெளியீடு
ஜிபி முத்து நடித்துள்ள திரைப்படத்தை காண தாங்கள் ஆவலுடன் காத்திருப்பதாக கூறிய அவரது ரசிகர்கள் சன்னி லியோனை சந்தித்தது பற்றி கேட்டு அவரை கலாய்த்தார்கள். தன்னை கலாய்க்கிறார்கள் என்று தெரிந்தும் முகம் கோணாமல் ரசிகர்கள் சிரிக்கும் படி பதிலளித்து அந்த இடத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications