"வெறித்தனம்" கடைக்குள்ளேயே.. "இங்கே இருக்கேன், வர்றீங்களா".. போலீஸை அழைத்த பெண்.. கடைசியில பார்த்தா?
கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்
கன்னியாகுமரி: கடைசியா உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஷீபா சொன்னதுமே, உடனே கிளம்பி வர சொன்னார் கள்ளக்காதலன்.. பிறகு மெடிக்கல் ஷாப்புக்குள்ளேயே அந்த சம்பவம் நடந்துள்ளது..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ்குமார்... 35 வயதாகிறது.. இவர் ஆரல்வாய் மொழியில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் நடந்து ஒரு வருடம்தான் ஆகிறது.. இவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

ஹலோ - ஹலோ
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை ரதீஷ் வேலைக்கு வந்தார்.. ஆனால் அடுத்த கொஞ்ச நேரத்தில், அவசர போலீஸ் எண்100 க்கு ஒரு போன் பறந்துள்ளது.. போலீசாரிடம் மறுமுனையில் பெண் ஒருவர் பேசினார்.. "ஆரல்வாய்மொழி இஎஸ்ஐ-யில் வேலை பார்க்கும் ரதீஷ்குமாரை குத்தி கொன்னுட்டேன்.. நான் அங்கேதான் உட்கார்ந்திருக்கறேன்" என்றார். இதைக் கேட்ட அதிர்ந்து போன போலீசார், ஆரல்வாய்மொழி ஸ்டேஷனுக்கு தகவலை சொல்லிவிட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

ஷீபா - ரத்தக்கறை
அங்கே நிஜமாகவே ஒரு சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அறிந்து மிரண்டு போனார்கள்.. உடம்பெல்லாம் கத்திக்குத்து காயங்களுடன் ரதீஷ் பிணமாக விழுந்து கிடந்தார்.. அவருக்கு பக்கத்திலேயே பெண் ஒருவர் சேரில் உட்கார்ந்திருந்தார்.. அவர் உடம்பெல்லாம் ரத்த கறை காணப்பட்டது.. விக்கி விக்கி அழுதுகொண்டே இருந்தார்.. அவரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர் போலீசார்.. பிறகு, சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்காக அனுப்பி வைத்தனர்..

மெடிக்கல் ஷாப்
ரத்தக்கறையுடன் காணப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ஷீபா.. அவர்தான் போலீசுக்கு போன் செய்துள்ளார் என்பதும் உறுதியானது.. இதையடுத்து, அவரிடம் விசாரணை ஆரம்பமானது.. சம்பந்தப்பட்ட பெண் மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர்.. இவரது கணவன் பெயர் மேக்ஸன்.. ஷீபாவுக்கு 36 வயதாகிறது.. 2 குழந்தைகளும் உள்ளனர்.. கடந்த 2013ம் ஆண்டுதான், 2வது குழந்தை இவருக்கு பிறந்துள்ளது.. அந்த நேரத்தில், நாகர்கோவில் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மெடிக்கல் ஷாப்புக்கு மருந்து வாங்க போயிருக்கிறார்.. அப்போதுதான், அந்த கடையில் உதவியாளராக வேலை பார்த்த ரதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஹாஸ்டல்
அப்போது முதலே இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.. ஒருகட்டத்தில் ஷீபாவை திருமணம் செய்ய ரதீஷ் முடிவு செய்தார்.. இதற்காக கணவனை டைவர்ஸ் செய்யும்படி, ஷீபாவை கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.. ஷீபாவும், ரதீஷ் பேச்சைக் கேட்டுக் கொண்டு, கடந்த 2019-ல் கணவரை டைவர்ஸ் செய்துவிட்டார்.. இருந்தாலும் 2 குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமே என்பதற்காக, நாகர்கோவிலிலேயே ஒரு ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்... ஷீபா இவ்வளவு செய்தும் ரதீஷ், அவரை திருமணம் செய்யவில்லை.. மாறாக, 2021ம் ஆண்டு வேறு பெண்ணை கல்யாணம் செய்துள்ளார்.

கர்ப்பம்
இதுதான் ஷீபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.. இதை பற்றி ஷீபா கேட்டதற்கு, விரைவில் அந்த பெண்ணை நானும் டைவர்ஸ் செய்துவிடுவேன், அதற்கு பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சமாதானம் செய்து வந்துள்ளார்.. ஆனால், டைவர்ஸ் செய்யவில்லை.. மாறாக, ரதீஷ் மனைவி கர்ப்பமானார்.. இதனால், ஷீபா மேலும் ஆவேசம் அடைந்தார்.. அதற்கு பிறகு ரதீஷ் பேச்சில் அலட்சியங்களும் தலைதூக்கின.. கடைசியில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை அறிந்து நொறுங்கி போனார் ஷீபா. அப்போதுதான், ரதீஷை கொலை செய்ய முடிவு செய்தார்.

மெடிக்கல் ஷாப்
நேற்று காலை ரதீஷூக்கு போனை போட்டார்.. 'கடைசியாக ஒருமுறை நேரில் பார்த்துக்கொள்கிறேன்... இனி நான் தொந்தரவு செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.. ரதீஷும் மெடிக்கல் ஷாப்புக்கு வர சொல்லி உள்ளார்.. அப்போது ஷீபா, வீட்டில் இருந்து ரதீஷூக்கு பிடித்த சாப்பாட்டை சமைத்தார்.. அதில் விஷத்தையும் கலந்தார்.. சாப்பாட்டுக் கூடையுடன் பஸ்ஸில் வந்து இறங்கினார்.. மெடிக்கல் ஷாப்பில் ரதீஷூடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.. பிறகு ரதீஷூக்கு சாப்பாட்டை பரிமாறினார்... அது தெரியாமல் சாப்பிட்டுவிட்ட ரதீஷ், சிறிது நேரத்தில் மயக்கத்தில் தள்ளாடினார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சரமாரியாக குத்த ஆரம்பித்தார்.. மொத்தம் 40 இடங்களில் சரமாரியாக குத்தி இருக்கிறார்..

ரத்தக்கறை
இறுதியில், ரதீஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்ததுமே, அவரது சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார்... பிறகு அவசர எண் 100 க்கு தொடர்பு கொண்டு கொலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார்... இவ்வளவும் போலீசாரிடம் வாக்குமூலமாக சொன்னதையடுத்து, தற்போது ஷீபா கைதாகி உள்ளார்.. இந்த சம்பவத்தினால் நாகர்கோவில் பகுதியே நடுங்கி கிடக்கிறது.












Click it and Unblock the Notifications