கன்னியாகுமரியில் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாத 2வது கணவர்.. இளம் பெண் நடுஇரவில் அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உள்ள பொற்றையடியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இளம்பெண் அவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்கு பெற்றோர் கட்டாயப்படுத்தி 2வது திருமணம் செய்து வைத்தனர். ஆனால் 2-வது கணவர் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாதவர் என்பதை அறிந்த இளம் பெண், நடு இரவில் வீட்டை விட்டு வெளியேறினார். காரில் லிப்ட் கேட்டு வந்த அந்த இளம் பெண் போலீஸ் ஸ்டேசனில் கூறியது தான் முக்கியமானது.

இன்றைக்கு பெண்கள் திருமண வாழ்க்கை கசப்பானால், இரண்டாவது திருமணம் செய்கிறார்கள். ஆனால் ஒருமுறைக்கு பல முறை வாய்ப்பு வழங்கியும் கணவன் திருந்தாமல் போனால் அல்லது வேறு பெண்ணுடன் சென்றால் அல்லது சந்தேகத்தை தொடர்ந்தால் மட்டுமே விவாகரத்து முடிவினை எடுக்கிறார்கள். அதேநேரம் கிராமங்களில் கணவன் மனைவி பிரிந்தாலும் முறைப்படி விவாகரத்து செய்யாமல், குடும்பத்தில் பஞ்சாயத்து செய்து பிரிந்து கொள்வது நடக்கிறது. அத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதும் நடக்கிறது. அப்படி நடந்த ஒரு திருமணம் பற்றி பார்ப்போம்.

Kanyakumari young woman left her husband s house at night after being forced into a second marriage

2வது திருமணம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பொற்றையடி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு சில வருடங்களுக்கு முன் பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் திருமண நடந்தது. ஆனால் சில மாதங்களில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் கணவரை விட்டு பிரிந்து நிரந்தரமாக பெற்றோருடன் வசித்து வந்தார். இதையடுத்து பெற்றோர் 2-வது திருமணம் செய்ய அவரை வலியுறுத்தி வந்தார்கள் ஆனால், இளம்பெண் திருமணம் வேண்டாம் என்று மறுத்து வந்தார்.

கட்டாய கல்யாணம்

ஒரு கட்டத்தில் இளம்பெண்ணுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே பேணு பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு இளம்பெண் முதலில் கடுயைமாக மறுப்பு தெரிவித்து வந்தார். ஆனால் பெற்றோர் கட்டாயப்படுத்தி 2-வது திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். பெற்றோரின் கட்டாயத்திற்காக இரண்டாவது திருமணம் செய்துள்ளார் இளம் பெண். இவர்களது திருமணம் பத்துகாணியில் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியேறினார்

திருமணமான ஓரிரு நாட்களிலேயே கணவரின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப சூழல்கள் பிடிக்கவில்லையாம். இதனால் வேதனை அடைந்த இளம்பெண் 2-வது திருமணமும் கசப்பாகிவிட்டதாக உணர்ந்துள்ளார். இதையடுத்து இளம்பெண் நேற்று முன்தினம் நடு இரவில் வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வழியாக நடந்து சென்ற இளம் பெண், கால் போன போக்கில் நடந்து சென்றுள்ளாராம். பத்துகாணி அருகே வந்த போது ஒரு காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார்.

காரில் லிப்ட் கேட்டு வந்தார்

தன்னை பேணு பகுதிக்கு அழைத்து செல்லுமாறு உதவி கேட்டார். காரில் வந்தவர்கள் அவர் மீது இரக்கப்பட்டு அவரை பேணு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்கிடையே கணவரின் உறவினர்கள் இளம்பெண்ணை பரபரப்பாக தேடி கொண்டிருந்தனர். அப்போது கணவர் வீட்டுக்கு அருகில் இளம்பெண் வந்து காரில் இறங்கி உள்ளார். இதை பார்த்த உறவினர்களும், பொதுமக்களும் காரில் இளம்பெண்ணை கடத்தி செல்வதாக கூறி தாக்க முயற்சித்துள்ளனர்.

திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாத கணவர்

அப்போது அந்த இளம்பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறியிருக்கிறார். அதன்பின்னர் காரில் வந்தவர்கள் சென்றுவிட்டனர். இதையடுத்து கிராம மக்கள் ஆறுகாணி காவல் நிலையத்துக்கும் இளம்பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் இளம்பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், கணவர் வீட்டாரையும், பெண்ணின் பெற்றோரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண், 2-வது கணவர் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாதவர் என இளம்பெண் தெரிவித்தார். அத்துடன் பெற்றோருடன் செல்வதாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+