மக்கள் சேவையில் வசந்தகுமாரின் அர்ப்பணிப்புகள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருக்கும்.. ராகுல் இரங்கல்
டெல்லி: கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் காலமானதை அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக இருந்தவர் வசந்தகுமார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை இன்று மதியம் முதலே கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மேலும் மோசமானதால் அவர் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 70.
The news of Kanyakumari MP, Shri H Vasanthakumar’s untimely demise due to Covid-19 has come as a shock.
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2020
His commitment to the congress ideology of serving the people will remain in our hearts forever.
Heartfelt condolences to his friends and family members. pic.twitter.com/oqhrfQXEUD
அவரது இறப்புக்கு பிரதமர் மோடி, பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கன்னியாகுமரி எம்பி எச் வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் இறந்தார் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
காங்கிரஸின் சித்தாந்தமான மக்கள் சேவையில் அவரது பங்களிப்பு எப்போதும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என வசந்தகுமாரின் புகைப்படத்துடன் ராகுல் கருத்து பதிவிட்டுள்ளார்.
Recommended Video
-
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications