கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்.. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கனமழையை தொடர்ந்து கன்னியாகுமரியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Rain Weather Report: Leave announced for the schools in Kanniyakumari

அதி தீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு நேற்று இரவு பெய்த மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு தெருக்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளது. தாழ்வான பகுதிகளில் லேசான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

காபூலில் அமெரிக்கா டிரோன் தாக்குதல்.. அல் கொய்தா தலைவர் அய்மான் ஜவாஹிரி கொலை.. பிடன் அறிவிப்பு காபூலில் அமெரிக்கா டிரோன் தாக்குதல்.. அல் கொய்தா தலைவர் அய்மான் ஜவாஹிரி கொலை.. பிடன் அறிவிப்பு

இந்த நிலையில்தான் பாதுகாப்பு கருதி அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை கன்னியாகுமரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இவர்கள் கன்னியாகுமரி சென்றுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து அவசரமாக தேசிய பேரிடர் மீட்பு படை கன்னியாகுமரி சென்றுள்ளது.

அங்கு இவர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல் இந்த மீட்பு படையின் இன்னொரு பிரிவு கேரளாவிற்கு செல்ல உள்ளது. கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வானிலை மைய அறிக்கைபடி தமிழ்நாட்டில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் விட்டுவிட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

முக்கியமாக கன்னியாகுமரியில் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பிச்சு எடுத்தது.மேலும் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Recommended Video

    TN-ல் கடந்த 3 ஆண்டுகளை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையத்தின் தலைவர்

    முக்கியமாக மதுரையில் கடந்த 2 நாட்களாக தீவிரமாக மழை பெய்து வந்தது. இதனால் மதுரையில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது.

    English summary
    Rain Weather Report: Leave announced for the schools in Kanniyakumari. கனமழையை தொடர்ந்து கன்னியாகுமரியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X