கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் விலக்கு மசோதா: வெளிநடப்பா செய்றீங்க.. பேசாம அதிமுகவை கலைச்சிட்டு பாஜகவில் சேருங்கள்.. ஜோதிமணி

Google Oneindia Tamil News

கரூர்: அதிமுகவுக்கு செலுத்தும் வாக்குகள் ஒவ்வொன்றும் மத்திய பாஜக அரசுக்கு செலுத்தும் வாக்குகள். எனவே இரு கட்சிகளையும் புறக்கணித்துவிடுங்கள் என கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜோதிமணி எம்பி விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கொமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

அதே போல் தங்களுக்கு செல்வாக்கு இருக்கும் இடங்களில் மேற்கண்ட கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

 பஞ்சாப் பாஜக வேட்பாளருக்கு அடி, உதை! பிரசாரம் செய்ய சென்ற இடத்தில் திடீர் தாக்குதல்.. பரபரப்பு! பஞ்சாப் பாஜக வேட்பாளருக்கு அடி, உதை! பிரசாரம் செய்ய சென்ற இடத்தில் திடீர் தாக்குதல்.. பரபரப்பு!

தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரம்

ஒவ்வொரு கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து விடும். இந்த நிலையில் கரூர் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. அதில் மூன்று வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

கரூரில் எம்பி ஜோதிமணி

கரூரில் எம்பி ஜோதிமணி

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆதரித்து கரூரில் எம்பி ஜோதிமணி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கரூர் பசுபதிபாளையம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிருத்திகா பாலகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஜோதிமணி பேசுகையில் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு கடந்த 8 மாதங்களில் 250 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.

வெள்ளத்தில் தத்தளிப்பு

வெள்ளத்தில் தத்தளிப்பு

தமிழகத்தில் வெள்ளத்தில் மக்கள் தத்தளித்த போதும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் மருத்துவமனையில் நிரம்பி வழிந்த போது தமிழக முதல்வரை நேரில் சென்று மக்களை காப்பாற்றிட களப்பணியாற்றியவர் ஸ்டாலின். தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு தயங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

மோடி அரசு

மோடி அரசு

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் மோடி அரசுக்கு எதிராக தமிழக முதல்வர் ஒரு யுத்தத்தை ஒட்டுமொத்த தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்றால் மக்கள் மன்றத்திற்கு ஜனநாயகத்தில் என்ன மதிப்பு உள்ளது. நீட் தேர்வு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாஜக புறக்கணித்த ஒரு மணி நேரத்தில் அதிமுகவும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது என்றால் அதிமுக எதற்கு, அதிமுகவை கலைத்துவிட்டு பாஜகவில் அக்கட்சியை இணைத்து கொள்ளலாமே.

தனித்து போட்டி

தனித்து போட்டி

அதிமுகவும் பாஜகவும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக கூறுகிறார்கள். நீங்கள் அதிமுகவுக்கு செலுத்தும் வாக்கு பாஜகவுக்கு செலுத்தும் வாக்கு தான் எனவே நீங்கள் இருவரும் புறக்கணிக்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட மாநகராட்சி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்து பெற்றி பெற செய்யுங்கள் என்றார் ஜோதிமணி.

English summary
Karur MP Jothimani says that ADMK can merge his party with BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X