கோவையைபோல் மற்றொரு கொடுமை.. பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரபல டாக்டருக்கு போலீஸ் வலைவீச்சு!
கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் ஒருவர் கரூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் (டாக்டர் சி.ஜி மருத்துவமனை) கேசியராக பணியாற்றி வருகிறார்.
Recommended Video
இவரது 17 வயது மகள் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் 34 வயதுடைய பெண் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

டாக்டர் ரஜினிகாந்த்
தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் டாக்டர் ரஜினிகாந்த் தனது 17 வயது மகளை அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக புகாரில் அவர் கூறியுள்ளார். இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை
17 வயது சிறுமியை மருத்துவமனை மேனேஜர் சரவணன் மூலம் மருத்துவமனைக்கு வரவழைத்து அவரது அறையில் வைத்து டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து டாக்டர் ரஜினிகாந்த், அவரது மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலாளர் கைது
மேலும் தலைமறைவாக இருந்த மேலாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் டாக்டர் ரஜினிகாந்த் தப்பி ஒடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல டாக்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கரூர் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சம்பவம்
ஆசிரியர் தொடரந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் கரூர் பகுதியில் மாணவிக்கு டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது கூடுதல் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications