கணவன் இறந்த இடத்தில் புல் கூட முளைக்கல..நந்தினிக்கு பூத்த காதல்! பீர் பாட்டிலால் 3 வயது பிஞ்சு கொலை?
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் கள்ளக்காதலன் மற்றும் குழந்தையின் தாயாரிடம் போலிசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் தாண்டிய உறவுகளால் பல்வேறு சமூக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நாள்தோறும் செய்திகளில் இது போன்ற கள்ளக்காதல் விவகாரங்களால் கொலை உள்ளிட்ட கொடூர சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
கணவனுக்கு மனைவியையோ அல்லது மனைவிக்கு கணவனையோ பிடிக்கவில்லை என்றால் மனமொத்து இருவரும் பிரிந்து தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம். இதனால் எந்த பிரச்சனையும் வருங்காலத்தில் வரப்போவதில்லை.

முறையற்ற உறவு
ஆனால் ஒருவருக்கொருவர் தெரியாமல் முறையற்ற உறவுகளில் ஈடுபடும் போது அது மிகப் பெரிய பிரச்சனைகளை கொண்டு வரும். இது குடும்பங்கள் சார்ந்த பிரச்சனையாக மட்டும் இது இருக்காது குழந்தைகளின் எதிர்காலம் கல்வி போன்றவை பாதிக்கப்படுவதோடு சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு சம்பவம் தான் கிருஷ்ணகிரியில் அரங்கேறியுள்ளது.

குழந்தை கொலை?
3 வயது குழந்தை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் கள்ளக்காதலன் மற்றும் குழந்தையின் தாயாரிடம் போலிசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தேர்ப்பட்டையில் வசித்து வந்தவர் நந்தினி(25), இவருக்கு 2 மகன்கள் உள்ளநிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அவரது கணவன் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் பார்வதி நகரை சேர்ந்த ரஞ்சித் என்பவருடன் நந்தினிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது

கள்ளக்காதல்
ஏற்கனவே மனைவியை பிரிந்த ரஞ்சித், நந்தினி,அவரது 2 மகன்களுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒசூர் அடுத்த ஆலூர் கிராமத்தில் குடியேறி உள்ளனர். ரஞ்சித், நந்தினியின் மகன்களை அவ்வப்போது அடித்து வந்ததால் 6 வயது மூத்த மகனை விடுதியில் சேர்த்துவிட்டு 3 வயதான இளைய மகன் ஜகனுடன் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

பீர் பாட்டிலால் தாக்குதல்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை ஜகனை, ரஞ்சித் டிசம்பர் 6ம் தேதி பீர்பாட்டிலால் தலையில் தாக்கியதில் படுகாயங்களுடன் 7ம் தேதி ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிசம்பர் 22 ம் தேதி ஒசூர் திரும்பிய நிலையில் கடந்த 27ம் தேதி குழந்தை உயிரிழந்ததாக ஒசூர், கோகுல்நகர் சுடுகாட்டில் குழந்தையை புதைத்துள்ளனர். இது வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக கள்ளக்காதலன் ரஞ்சித், நந்தினியை மிரட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

விசாரணை
கடந்த 10ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்க நந்தினியின் தாய் வள்ளி, நந்தினி வீட்டிற்கு குடும்ப அட்டை வாங்க சென்றபோது இளைய மகன் குறித்து கேட்டபொழுது இறந்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த வள்ளி இதுக்குறித்து குழந்தையின் பெரியப்பா சுரேசிற்கு தகவல் அளித்து பின்னர் ஒசூர் அட்கோ போலிசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கள்ளக்காதலன் ரஞ்சித், தாய் நந்தினி ஆகியோர் இருவரையும் நேரில் சுடுகாட்டிற்கு அழைத்து சென்று புதைத்த குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுக்குறித்து ஒசூர் அட்கோ போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications