Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனசாட்சியே இல்லையா? நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர்! மூளைவளர்ச்சியற்ற மகனை 1.5 கிமீ சுமந்த தந்தை!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 வயது மூளை வளர்ச்சியற்ற மகனுடன் சென்ற தந்தையை பேருந்து நடத்துனர் பாதி வழியில் இறக்கி விட்டதால் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அவரை தூக்கி கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற்றிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த தக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.

ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி வாணிஸ்ரீ, 50 மற்றும் மூளைவளர்ச்சியற்ற, தன், 16 வயது மகன் ஹரிபிரசாத்துடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கிருஷ்ணகிரிக்கு பேருந்தில் வந்துள்ளார்.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

அப்போது அவரை பேருந்து நடத்துனர் ' இப்பேருந்து ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லாது கீழே இறங்குங்கள்' எனக்கூறி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். இதையடுத்து மூளைவளர்ச்சியற்ற தன், 16 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்கமுடியாமல் ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கோபாலகிருஷ்ணன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கூறுகையில்," "நான் குடும்பத்துடன் ஓசூரில் வசித்து வருகிறேன். எனது மகனுக்கு பிறப்பிலிருந்தே மூளை வளர்ச்சி கிடையாது.

மாற்றுத்திறனாளி மகன்

மாற்றுத்திறனாளி மகன்

மாற்றுத்திறனாளியான அவனுக்கு வலிப்பு நோயும் உள்ளது. இந்நிலையில் என் மகனுக்கு மாற்றுத்திறனாளி நிதியுதவி மற்றும் பட்டா பிரச்னை தொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க ஓசூரில் இருந்து தர்மபுரி செல்லும் அரசு பேருந்து (TN29 2720) ஏறினேன். அப்போது நடத்துனரிடம் ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் எனக்கூறி ஏறினோம்.

கல்நெஞ்ச நடத்துனர்

கல்நெஞ்ச நடத்துனர்

ஆனால் அப்பொழுது பேருந்து மாவட்ட ஆட்சியரகம் செல்லும் எனக்கூறி ஏற்றுக் கொண்ட பேருந்து நடத்துனர் கிருஷ்ணகிரி நெருங்கியவுடன் பேருந்து ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லாது பாலத்தின் மேலே சென்று விடுவோம் நீங்கள் கீழே இறங்குங்கள்' எனக் கூறி தரக்குறைவாக பேசினார். மாற்றுத்திறனாளி மகனை தூக்கி செல்வதில் சிரமம் இருக்கும் எனக்கூறியும் அவர் நடுவழியில் இறக்கி சென்றுவிட்டார்.

கண்டுகொள்ளவில்லை

கண்டுகொள்ளவில்லை

பேருந்து பாலத்தின் கீழே சென்று ஆட்சியராக அலுவலக நிறுத்தத்தில் நிறுத்தி சென்றாலும் மேலே செல்லும் தூரமும் கீழே செல்லும் தூரமும் ஒரே தூரம்தான் அதனால் பேருந்துக்கு எந்தவித காலதாமதமும் ஆகாத சூழ்நிலையில் மனிதாபிமானம் இல்லாமல் தூரத்திலேயே இறக்கி விட்டு சென்றது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது என்று தெரிவித்தார். ஏற்கனவே, 3 வருட பட்டா பிரச்னை, மாற்றுத்திறனாளி மகனுடன் போராடும் எங்களை அரசு உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை" என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+