"உன்னை இன்வைட் பண்ணுவாங்க.. எதுக்கு கல்யாணத்துக்கா??".. Clubhouse பரிதாபங்கள்!

Subscribe to Oneindia Tamil

யார் வாயைப் போய்க் கிண்டினாலும்.. வெளியே வந்து விழுவது.. ஸாரி அது அல்ல.. கிளப்ஹவுஸ் என்ற வார்த்தைதான்!.

"என்னடா இது சோசியல் மீடியா லைபுக்கு வந்த சோதனை" என்று எல்லாப் பேரும் குத்த வைத்து கன்னத்திலேயே குத்திக் கொள்கிறார்கள்.. எல்லாம் இந்த கிளப்ஹவுஸ் வந்த நேரம்தான்.

"என்ன மச்சா... இன்னுமா நீ கிளப்ஹவுஸ்ல சேரலை.. சிம்ப்ளி வேஸ்ட்ரா நீ" என்று ஏதோ பெரிய "பிளன்டர்" பண்ணா மாதிரியா ஒரு குரூப் குதிச்சிட்டு நடந்து போவதையும் நம்மால் அவதானிக்க முடிகிறது.

டைட் ஜீன்ஸும், சட்டை மேலே அத்தனை பட்டன் இருந்தும் டாப்பை மட்டும் திறந்து விட்டபடியும், காதில் இயர்போனை சொருகிக் கொண்டு தலையை சரியாக சீவாமல் முன்னாடி இழுத்து விட்டும், சைடில் சரிய விட்டும் நடந்து போன ஒரு குட்டிப் பையரை.. பையன்னு சொன்னா கோச்சுக்குவான்ல... லைட்டா இழுத்து.. "இன்னா மைலு.. இன்னா மேட்டர்" என்று கேட்டோம்.

"பெர்சு.. அவசியமா தெரியணுமா"

"ஆமா ப்ரோ.. தெரிஞ்சுக்கலாமே.. ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்கு"

"உனக்கு நான் புரோவா.. ஓவர்யா.. இப்படிக்கா வந்து குந்து"

"ஆச்சு.. டெல் மீ"

Let us enjoy the new app, the Clubhouse

"கிளப்ஹவுஸ்னா என்னான்னா.. அது ஒரு ஆடியோ அரட்டை குரூப். இது ஒரு ஆப். டவுன்லோட் பண்ணிக்கணும்.. புல்லா ஆடியோதான்.. வாய்ஸ் மட்டும்தான்.. பேசிட்டே இருப்பாங்க... பிடிச்சா கேக்கலாம்.. நீயும் முடிஞ்சா பேசலாம்.. இல்லாட்டி வேடிக்கை மட்டும் பார்த்துட்டு போய்ட்டே இருக்கலாம்"

"அப்டியா.. இந்த சாட் மாதிரி"

"அப்படித்தான்.. ஆனா இது வேற மாரி.. கேமரால்லாம் கிடையாது.. தகிரியமா அட்டென்ட் பண்ணலாம்"

"அப்டியா.. அப்ப "ராஜு பாய்"க்கு இது ஒத்துவராதே"

"அந்த மாதிரி கஸ்மாலத்துக்கெல்லாம் இங்கே நோ ஜாப் ப்ரோ"

"சரி டவுன்லோட் பண்ணிட்டு பேசிட்டே இருக்கலாமா"

"அதெல்லாம் கிடையாது.. டவுன்லோட் பண்ணா மட்டும் எல்லாம் முடிஞ்சு போய்ராது. டவுன்லோட் பர்ஸ்ட் ஸ்டெப். அதுக்குப் பிறகு.. ஏற்கனவே அதுல எவனாச்சும் மெம்பரா இருப்பான்ல.. அவன் வந்து உன்னிய இன்வைட் பண்ணனும்.."

"எதுக்கு அவன் கல்யாணத்துக்கா"

"யோவ்.. அதுல பேசுறதுக்குய்யா.. அவன் வந்து உன்னை இன்வைட் பண்ணாதான் நீ அட்டென்ட் பண்ண முடியும். இல்லாட்டி பென்ச்சிலேயே குந்தியிருக்கணும்.. கம்முன்னு.. எவனாச்சும் வந்து கூப்பிடுற வரைக்கும்"

"ஓ.. இது வேறயா.. இலவு காத்த கிளி மாதிரி"

"ஆமா பெர்சு.. அந்த எழவேதான்.. அங்க நிறைய ரூம்ஸ் இருக்கும்.. ஏகப்பட்ட டாப்பிக்ல பேசிட்டே இருப்பானுக.. உனக்கு பிடிச்ச ரூமுக்குப் போய் நீயும் பேசலாம், வேடிக்கை பார்க்கலாம்.. அது ஒரு மாதிரி போய்ட்டிருக்கும்"

"புச்சா இருக்குடா குட்டி.. நிஜமாவே.. ஆமா செல்பி எடுத்து அதுல ஷேர் பண்ணலாமா.. நம்மளை"

"செல்பியா!.. பெர்சு.. அது வெறும் வாய்ஸ்தான்.. போட்டோல்லாம் அனுப்ப முடியாது.. டெக்ஸ்ட் கூட பண்ண முடியாது.. வெறும் காதுக்கும், வாய்க்கும் மட்டும்தான் வேலை.. கேக்கலாம் இல்லாட்டி பேசலாம்.. தட்ஸ் ஆல்"

"அப்டியா.. பொத்தாம் பொதுவான சொன்னா இது ஒரு மாடர்ன் பொரணி மாதிரி"

"அப்படித்தான்"

"சரி நான் இப்ப ஒரு ரூமுக்குள்ள பூந்துட்டேன்னு வய்யி. அடுத்து என்ன பண்ணும்.."

"கையைத் தூக்கணும்"

"உச்சா வந்தா நானா போய்க்கிறேன்.. இன்னாத்துக்கு கையைத் தூக்கணும்"

"இப்படியே பேசினு இரு.. காபி ஹவுஸ் பக்கம் கூட நீ போக முடியாம போகப் போவுது பாரு"

"கோச்சுக்காதம்மா"

"நீ ஏதாவது பேசணும்னா கையைத் தூக்கணும்.. நீ கையைத் தூக்குனா.. அந்த ரூமோட ஹோஸ்ட் இருக்கான்ல.. அவன் உன்னை பேச பெர்மிஷன் கொடுப்பான்.. நீ பேசலாம்.. அதுக்குத்தான் கையைத் தூக்கணும்"

"சரி எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை.. என்னா பண்ணலாம்"

"நீயே ஒரு ரூமை கிரியேட் பண்ணி.. எவனாச்சும் வர்றானான்னு தேவுடு காத்திரு.. வந்தா நீங்க மட்டும் பேசிட்டிருங்க"

"பயங்கர டெக்னாலஜியா இருக்கேய்யா"

"ஆமாமா"

ஒருபக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் லாக்டவுன்.. மறுபக்கம் அரசியல் குமட்டல்கள்.. சரி அந்தப் பக்கம் போலாம்னா ராஜகோபாலன்கள்.. அடச் சை என்று ஒரு வெறுப்பு வரும் பாருங்க.. அந்த மாதிரியான வெறுப்பு கடுப்புகளிலிருந்து தப்பிக்க இதுபோன்ற அக்கப்போர்கள்.. அதாவது கிளப்ஹவுஸ் போன்ற பொழுதுபோக்குகளும் தேவைதான் போல.. .போய்ப் பாருங்க.. பிடிச்சா பழகிக்கங்க.. இல்லாட்டி திரும்பி வந்துருங்க.. எப்பவும் உங்களுக்காக காத்திருக்கிறது.. எவர்கிரீன் பேவரைட் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர்ர்ர்ர்ர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+