78 ஆண்டுகள்.. தேம்ஸ் நதிக்குள் உறங்கும் 'ராட்சசன்' - இது வெடித்தால் சுனாமிதான்.. திக் திக் லண்டன்!
லண்டன்: பிரிட்டனில் பாயும் பிரம்மாண்ட நதியான தேம்ஸுக்குள் 78 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிப் போன பல டன் எடைக்கொண்ட பயங்கர வெடிகுண்டுகள் அடங்கிய கப்பலை மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்த பணியின் போது, மிக மிக சக்திவாய்ந்த அந்த வெடிகுண்டுகள் வெடிக்க நேர்ந்தால் அது தேம்ஸ் நதியில் பெரிய சுனாமியை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதனால் இந்தப் பணியை எப்படி மேற்கொள்வது எனத் தெரியாமல் பிரிட்டன் அரசு திணறி வருகிறது. வெடிகுண்டுகளை தொந்தரவு செய்யாமல் இந்தப் பணியை மேற்கொள்ள முடியுமா என ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது.

தேம்ஸ் நதி
பிரிட்டனின் முக்கிய அடையாளங்களில் ஒன்று தேம்ஸ் நதி ஆகும். சுமார் 324
கி.மீ. நீளம் கொண்ட இந்த தேம்ஸ் நதி, லண்டன் மட்டுமல்லாமல் பல்வேறு
நகரங்கள், கிராமங்கள், தீவுகள் வழியாக பாய்ந்து செல்கிறது. லண்டன் போன்ற பல
நகரங்கள் தேம்ஸ் நதியின் மீது கட்டப்பட்டவை ஆகும். லண்டனுக்கு அழகு
சேர்க்கும் பல விஷயங்களில் தேம்ஸ் நதிக்கும் முக்கிய பங்கு உண்டு. இன்றுவரை
தேம்ஸ் நதியில் படகு போக்குவரத்தும், சிறு சிறு கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.

இரண்டாம் உலகப் போர்
இந்நிலையில், இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது,
பிரிட்டனுக்கு உதவுவதற்காக 'எஸ்எஸ் ரிச்சர்ட் மான்ட்கோமெரி' என்ற கப்பலை
1943-ம் ஆண்டு அமெரிக்கா அனுப்பி வைத்தது. சுமார் 7,100 டன் எடைக்கொண்ட
அந்தக் கப்பலில் 1,400 டன் எடையில் பல பெரிய அளவிலான பயங்கர வெடிகுண்டுகள்
இருந்தன. 1944-ம் ஆண்டு தேம்ஸ் நதியை அக்கப்பல் வந்தடைந்தது.

வெடிகுண்டுகளுடன் மூழ்கிய கப்பல்..
சாண்ட் லேண்ட்' என்ற இடத்துக்கு வந்த போது அந்தக் கப்பல் எதிர்பாராதவிதமாக
தரைத்தட்டி சேதமடைந்தது. இதையடுத்து, அந்தக் கப்பலையும், உள்ளே இருக்கும்
வெடிகுண்டுகளையும் எடுக்க பிரிட்டிஷ் ராணுவத்தினர் முயற்சி செய்தனர்.
ஆனால், இந்த முயற்சியில் கப்பல் மேலும் சேதமடைந்து அதற்குள் தண்ணீர்
புகுந்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ராணுவத்தினர், உடனடியாக தங்கள்
முயற்சியை கைவிட்டு கரைக்கு வந்தனர். இதையடுத்து, ஒருசில நிமிடங்களிலேயே
அந்த பிரம்மாண்ட கப்பல் தேம்ஸ் நதிக்குள் முழுவதுமாக மூழ்கிப் போனது.
அதனுள் அந்த 1,400 டன் எடைக்கொண்ட பயங்கர வெடிகுண்டுகளும் மூழ்கின.
கப்பல் முழுவதுமாக மூழ்கிய போதிலும், அதன் மேற்பகுதியில் இருக்கும்
'மாஸ்ட்ஸ்' (Masts) என அழைக்கப்படும் நீளமான கம்பிகள் தேம்ஸ் நதியின்
மேற்பரப்பில் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றன.

'தொட்டால் கெட்டீர்கள்' - எச்சரித்த விஞ்ஞானிகள்
இதனிடையே, இந்தக் கப்பல் மூழ்கியதும் பிரிட்டனே பரபரப்பானது. கப்பலுக்குள்
இருக்கும் வெடிகுண்டுகள் வெடித்துவிடுமோ என அரசாங்கமும், மக்களும் அஞ்சினர். ஆனால், அந்தக் கப்பலையோ, வெடிகுண்டுகளையோ யாரும் தொந்தரவு
செய்யாத வரை அவை வெடிக்காது என வெடிகுண்டு வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இதனால் பிரிட்டன் அரசாங்கம் நிம்மதி அடைந்தது. இருந்தபோதிலும், அந்தக்
கப்பலையும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் பிரிட்டன் அரசும், லண்டனம்
நிர்வாகமும் தொடர்ந்து கவனித்து வருகிறது.

கப்பலை மீட்க முயற்சி...
இந்த சூழலில் தான், அந்தக் கப்பல் மூழ்கி இருந்த இடத்தில் அண்மையில்
ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்தக் கப்பல் மிகவும் சிதிலம்
அடைந்து இருப்பது கண்டறியப்பட்டது. கப்பலின் நிலைமை இப்படி இருக்கையில்,
அதன் மேல் இருக்கும் கம்பிகள் தொடர்ந்து அழுத்துவதால் கப்பல் மேலும்
சேதமடைந்து, அதனுள் இருக்கும் பயங்கர வெடிகுண்டுகளும் வெடிக்கும் வாய்ப்பு
உள்ளதாக அராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, கப்பலின் மேல் இருக்கும் மாஸ்ட்ஸ் கம்பிகளை வெட்டி எடுக்கும்
பணியை லண்டன் நிர்வாகம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்காக சில
ஒப்பந்ததாரர்களையும் லண்டன் நிர்வாகம் அமர்த்தியுள்ளது. அடுத்த மாதம்
தொடங்கவுள்ள இப்பணி, நவம்பர் மாதம் வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

தேம்ஸில் சுனாமி - விஞ்ஞானிகள் பகீர்
இது ஒருபுறம் இருக்க, லண்டன் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சில
விஞ்ஞானிகளும், வெடிகுண்டு வல்லுநர்களும் கடும் அதிருப்தி
தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "வெடிகுண்டுகளை
தொந்தரவு செய்யாத வரை தான் அவை அமைதியாக இருக்கும். சிறு அலட்சியத்தில்
ஏதேனும் தவறு நடந்தால் கூட வெடிகுண்டுகள் வெடிக்கும். அப்படி வெடித்தால்
தேம்ஸ் நதியில் ஒரு சுனாமியே உருவாகும். 30 முதல் 40 அடி வரை அலைகள்
எழும்பும். மார்கெட் பகுதி முதல் லண்டனின் மத்திய பகுதி வரை இந்த சுனாமி
அலைகள் தாக்கும். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்" என்றார்.
"தேம்ஸ் நதியில் சுனாமி ஏற்பட்டால் அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே
பயமாக இருக்கிறது" என வரலாற்றாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications