விவாதத்துக்கு நானும் வரலாமா.? லைவ் நிகழ்ச்சியில் பூனை..! கலகலத்து போன டிவி சேனல்
லண்டன்: ஜார்ஜியாவில் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றின் நேரடி விவாத நிகழ்ச்சியின் போது பூனை ஒன்று உள்ளே புகுந்து நெறியாளரையும், விருந்தினரையும் தொல்லை செய்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது.
Recommended Video
டிபிலிசி நகரை தலைநகராக கொண்ட ஜார்ஜியா நாடு, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களுக்கு மையப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை வளம் கொழிக்கும் ஜார்ஜியா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் நாடாகவும் உள்ளது.. தற்போது பல்வேறு அரசியல் காரணங்களுக்காக அந்த நாட்டில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், இது குறித்து அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது..

நேரலையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரும், விருந்தினரும் நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். நேரலையில் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருந்தபோது விவாத நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அமர்ந்து இருந்த மேஜை மீது திடீரென ஒரு பெரிய சைஸ் பூனை தாவி அமர்ந்தது..திடீரென பெரிய சைஸ் பூனையை கண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் பிறகு ஒருவாறாக சமாளித்துக் கொண்டு, இது தங்கள் தொலைக்காட்சியின் செல்லப்பிராணியான பூனை ககுஷ்சா என்றும், இவரையும் விவாதத்தில் பங்கேற்க வைக்கலாமா என விருந்தினரிடம் கேட்டார். ககுஷ்சா தயவு செய்து நீ கீழே இறங்கு என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர், ககுஷ்சா மிகவும் நல்ல செல்லப்பிராணி, நாம் மீண்டும் விவாதத்தை தொடரலாம் என கூறினார்..
இவ்வாறு அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்க எதுவுமே தெரியாததுபோல மேஜையின் மையப் பகுதியில் சிறிது நேரம் அமர்ந்து இருந்த பூனை ககுஷ்சா பிறகு ஒருவாறு அங்கிருந்து கிளம்பிச் சென்றது. அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது நேரலையில் பூனை குறுக்கிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications