லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமருக்கே இந்த நிலையா! பிரிட்டனில் போரிஸ் ஜான்சனுக்கு பைன்.. கொரோனா விதிமீறலால் போலீஸ் அதிரடி

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் கொரோனா விதிகளை மீறி நடந்த விருந்து தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார். நிதி அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் உலக நாடுகளில் கொரோனா பரவியபோது பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்தது. பிரதமர் போரிஸ் ஜான்சனும் பாதிக்கப்பட்டார். மேலும் நாட்டில் பலி எண்ணிக்கையும் அதிகரித்தது.

 கீவ் வீதிகளில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.. உக்ரைனிற்கு சப்ரைஸ் விசிட்! பரபரக்கும் உலக நாடுகள் கீவ் வீதிகளில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.. உக்ரைனிற்கு சப்ரைஸ் விசிட்! பரபரக்கும் உலக நாடுகள்

ஊரடங்கு மீறல்

ஊரடங்கு மீறல்

இதனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் 2020ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது டவுனிங் தெருவில் உள்ள போரிஸ் ஜான்சனில் அலுவலகத்தில் விதிகளை மீறி கூட்டம் கூடியதாகவும், 2020 ஜூன் மாதம் 19ம் தேதி பிறந்தநாள் விழா பிரதமர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டதாக புகார் எழுந்தது.

விருந்து நிகழ்ச்சி

விருந்து நிகழ்ச்சி

இந்த விழாவில் நடந்த விருந்தில் அதிகளவில் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதில் நிதி அமைச்சர் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஆகியோரும் பங்கேற்றதாக கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுகளை போரிஸ் ஜான்சன் மறுப்பு தெரிவித்தார். இதுபற்றி மெட்ரோபாலிட்டன் போலீசார் விசாரணை நடத்தினர்.

விதிமீறல் உறுதி

விதிமீறல் உறுதி

விசாரணையில் கொரோனா விதிகளை மீறி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது தெரியவந்தது. மேலும் பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அறிந்த எதிர்க்கட்சிகள் இருவரையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். இதற்கு போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். மேலும் இருவரும் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினர். இருப்பினும் எதிர்க்கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

இந்த நிலையில் கொரோனா விதிமுறையை மீறி நடந்த விருந்து நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதற்காக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவருக்கும் 50 பவுண்ட் முதல் 300 பவுண்ட்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம்) வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Recommended Video

    Aanees Cricket Talks Epi 02 | History and Evolution of Cricket Ball | OneIndia Tamil
    விதிமீறிய முதல் பிரதமர்

    விதிமீறிய முதல் பிரதமர்

    இந்த அபராதம் விதிக்கும் பட்சத்தில் விதிகளை மீறி அபராதம் செலுத்திய முதல் பிரதமர் என்ற பெயரை போரிஸ் ஜான்சன் பெறுவார். ஏனென்றால் இதுவரை பிரதமராக இருந்தவர்கள் தங்களது பதவி காலத்தில் விதிகளை மீறியதும், அபராதம் செலுத்தியதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Britain Prime Minister Boris Johnson and Finance Minister Rishi Sunak have been fined for allegedly violating a Covid 19 lock down in Britain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X