"காதில் சிக்கிய இயர் பட்ஸ்.." காது கேட்கவில்லை என நினைத்து 5 ஆண்டுகளாக சுற்றிய பிரிட்டன் நபர்
லண்டன்: காதில் இயர் பட்ஸ் சிக்கிக்கொண்டது தெரியாமல் உண்மையிலேயே நமக்கு கேட்கும் திறன் போய்விட்டதாக நினைத்துக்குக்கொண்டு 5 ஆண்டுகள் ஒருவர் வசித்து வந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின் தற்போது அந்த இயர் பட்ஸ் மீட்கப்பட்டுள்ளது.
காதில் ஹெட்போன்களுடன் இல்லாமல் வலம் வரும் இன்றைய தலைமுறையினரை பார்ப்பதே அரிதாகிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு இயர்பட்ஸ் எனப்படும் ஹெட்போன்களின் பயன்பாடு பெருகிவிட்டது.
நகரம், கிராமம் என்று பாரபட்சம் எதுவும் இன்றி அனைத்து பக்கமும் இப்பொதெல்லாம் இயர் பட்ஸ் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

இங்கிலாந்தில் சம்பவம்
அதுவும் தற்போது புளுடூத் வசதியுடன் கூடிய வயர்லெஸ் ஹெட்செட்டுகள் வந்தபிறகெல்லாம் பலரும் காதில் எப்போது இயர்பட்ஸ் சகிதமாகத்தான் வலம் வருகிறார்கள். ஆனால் இத்தகைய இயர்பட்ஸ்களை கொஞ்சம் அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் ஆபத்து இல்லாமலும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில்தான் தற்போது இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

காதுகேளாமை பிரச்சினை
இங்கிலாந்தின் டோரஸ் கவுண்டியில் இருக்கும் வேமவுத் என்ற பகுதியை சேர்ந்தவர் வல்லேஸ் லீ. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. வயது அதிகம் ஆகிக் கொண்டு இருப்பதால் தனக்கு காதுகேளாமை பிரச்சினை அதிகரித்து விட்டதோ என்று வல்லாஸ் லீ அச்சம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் காதுகேளாமை பிரச்சினை அதிகரித்துக் கொண்டே சென்றது.

காதுக்குள்ளே இயர் பட்ஸ் பாகம்
இதனால் ஒரு காதில் மட்டும் இந்த பிரச்சினை இருப்பதை உணர்ந்த வல்லேஸ், வீட்டிலேயே பரிசோதித்து பார்க்கும் எண்டோஸ்கோப் கருவியை வாங்கி சுயமாக பரிசோதித்து பார்த்து இருக்கிறார். அதில் காதின் உட்புறம் சிறிய ரக பொருள் ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பதறிப்போன வல்லேஸ் உடனடியாக மருத்துவரை அணுகினார். அப்போதுதான் காதிற்குல் இயர்பட்ஸின் சிறிய பாகம் ஒன்று சிக்கியிருப்பது தெரியவந்து இருக்கிறது.

5 ஆண்டுளாக காதில் சிக்கியிருந்த..
அதுவும் ஒரு நாள், இரண்டு நாள் அல்ல.. 5 ஆண்டுகள் காதில் சிக்கிய இயர்பட்சுடன் கஷ்டப்பட்டு இருக்கிறார். காதில் இயர்பட்ஸ் சிக்கிக் கொண்டது தெரியாமல் 5 ஆண்டுகளாக காது கேட்கும் திறன் பாதிப்பு அடைந்து விட்டதாக வருத்தப்பட்டுக் கொண்டு இருந்த வல்லேஸிற்கு சிறிய சிகிச்சை மூலம் பட்ஸின் பாகம் அகற்றப்பட்டது. தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள வல்லேஸ்.. இயர்பட்ஸ் எப்போது சிக்கியது என்பது குறித்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

சிறிய ரக இயர் பட்ஸ்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க வல்லேஸ் சென்று இருந்த போது இயர்பட்ஸ் ஒன்றை வாங்கியிருக்கிறார். இந்த இயர் பட்ஸ், சத்தத்திற்கு ஏற்ப வெவ்வேறு வகைகளில் காதில் மாட்டிக்கொள்ளும் வகையில் மிகவும் சிறிய ரகத்தில் ஆனதாம். இதில் உள்ள ஒரு சிறிய பாகம் தான் காதில் சிக்கிக் கொண்டு இருந்துக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியில் திளைக்கிறார்
66-வயதான வல்லேஸ் லீ முன்னாள் கடற்படை என்ஜினியர் ஆவார். விமான பயணத்தின் போதுதான் தனது காதில் இயர்பட்சின் பாகம் சிக்கியிருக்கும் என்றும் வல்லேஸ் லீ தெரிவித்துள்ளார். தற்போது காதில் கேட்கும் திறன் நன்றாக இருப்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறார் வல்லேஸ் லீ.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications