20 கரப்பான் பூச்சிகள்.. ரூ.22 லட்சம் செலவு.. நூதன முறையில் பழிக்கு பழி!
இங்கிலாந்து நாட்டில் உள்ள லின்கான் நகரின் ஓரேகான் பகுதியில் சம்பள பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில், ஹோட்டலுக்குள் 20 கரப்பான்பூச்சிகளை விட்டு நூதனமான முறையில் முதலாளியைப் பழி வாங்கியிருக்கிறார் ஊழியர் ஒருவர்.
லண்டன்: சம்பள பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில், ஹோட்டலுக்குள் 20 கரப்பான்பூச்சிகளை விட்டு நூதனமான முறையில் முதலாளியைப் பழி வாங்கியிருக்கிறார் ஊழியர் ஒருவர்.
இலங்கிலாந்து நாட்டில் உள்ள லின்கான் நகரின் ஓரேகான் பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் டாம் வில்லியம்ஸ் என்பவர் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டாம் வில்லியம்ஸ்க்கும் ஹோட்டல் நிர்வாகத்துக்கும். இடையே சம்பள பணம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வில்லியம் விடுமுறை எடுத்த நாட்களுக்கு ஹோட்டல் நிர்வாகம் சம்பளம் பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது.

சம்பள பிரச்சினை
இதனால் கோபம் அடைந்த வில்லியம்ஸ், தனது சம்பள பணத்தை கேட்டு ஹோட்டல் முதலாளியிடம் பிரச்சினை செய்தார். ஆனால் பிடித்தம் செய்த சம்பளப் பணத்தை தர முதலாளி கண்டிப்பாக மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த வில்லியம்ஸ் முதலாளியை பழிவாங்க முடிவு செய்தார்.

கரப்பான் பூச்சிகள்
அதன்படி அவர் ஹோட்டல் சமையல் அறையில் கரப்பான் பூச்சிகளை விட முடிவு செய்தார். இதுகுறித்து முதலாளிக்கு மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுக்கவும் வில்லியம்ஸ் துணிந்தார். மிரட்டல் விடுத்தவாறே அதனை செய்தும் காட்டிவிட்டார் அவர். ஹோட்டலின் சமையல் அறையில் நுழைந்த வில்லியம்ஸ் தான் கொண்டு வந்திருந்த 20 கரப்பான் பூச்சிகளை அங்கே விட்டார்.

சிறை தண்டனை
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் முதலாளி வில்லியம்ஸை வேலையைவிட்டு நீக்கியதுடன், அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் வில்லியம்ஸை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், வில்லியம்ஸ்க்கு 17 மாதங்கள் சிறை தண்டனை அளித்துள்ளது.

ரூ.22 லட்சம் செலவு
தனக்கு சம்பளம் பிடித்தம் செய்த ஹோட்டல் முதலாளியை பழிவாங்க கரப்பான் பூச்சிகளை ஆயுதமாக பயன்படுத்திய வில்லியம்ஸ் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். வில்லியம்ஸ் செய்த செயலால் ஹோட்டலை சுத்தம் செய்ய ரூ.22 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார் அந்த முதலாளி. இந்த சம்பவம் அந்நாட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications