டெல்டா+ ஓமிக்ரான்= டெல்டாக்ரான்.. விரைவில் அடுத்த அலை? பிரிட்டனை அச்சுறுத்தும் புதிய உருமாறிய கொரோனா
லண்டன்: பிரிட்டன் நாட்டில் புதிதாக டெல்டாக்ரான் என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால் அதை முழுமையாக அழிப்பது கிட்டதட்ட முடியாத காரியமாகிவிட்டது. வல்லரசு நாடுகள் கூட கொரோனாவை அழிக்கத் திணறி வருகிறது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

டெல்டாக்ரான்
இதனால், உருமாறிய கொரோனா குறித்த ஆய்வுகளை உலக நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் புதிதாக டெல்டாக்ரான் என்ற உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது உலக சுகாதார நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டில் இந்த புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்டாக்ரான் என்றால் என்ன
இந்த டெல்டாக்ரான் கொரோனா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் என இரண்டு உருமாறிய கொரோனா வைரசின் பண்புகளையும் கொண்டுள்ளதாகவும் இது ஒரு கலப்பின மாறுபாடு (hybrid variant) என்றும் பிரிட்டன் நாட்டின் சுகாதார பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. டெல்டாக்ரான் உருமாறிய வைரஸ் எந்தளவு கடுமையானlது என்றோ அல்லது அதன் அறிகுறிகள் எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்பது பற்றியோ அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த புதிய உருமாறிய கொரோனா குறித்த தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏன் முக்கியம்
ஏனென்றால், இந்தியாவில் டெல்டா கொரோனா காரணமாகவே மிக மோசமான 2ஆவது அலை ஏற்பட்டது. அதேபோல நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவால் 3ஆவது அலை ஏற்பட்டது. அதாவது டெல்டா கொரோனா சமயத்தில் மூச்சுத் திணறல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது. அதேநேரம் ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவும் திறனைப் பெற்று இருந்தது. டெல்டா மற்றும் ஓமிக்ரான் என 2 உருமாறிய கொரோனாவின் திறன்களைப் பெற்று இருப்பதால் இந்த டெல்டாக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதலில் சைப்ரஸ்
அதேநேரம் பிரிட்டன் நாட்டில் இதுவரை பதிவாகும் கேஸ்களை பார்க்கும்போது, டெல்டாக்ரான் முந்தைய கொரோனா வகைகளைப் போலப் பேரழிவை ஏற்படுத்தாது என்றே சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டெல்டாக்ரான் உருமாறிய கொரோனா முதன்முதலில் கடந்த ஆண்டு இறுதியில் சைப்ரஸில் கண்டறியப்பட்டது. சைப்ரஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் லியோனிடோஸ் கோஸ்ட்ரிகிஸ் என்பவரது குழுவே இந்த உருமாறிய கொரோனாவை முதலில் கண்டறிந்தனர்.

ஏற்க மறுப்பு
அதைத் தொடர்ந்து கடந்த 2022 ஜனவரி 7ஆம் தேதி இந்த டெல்டாக்ரான் கொரோனா குறித்த தரவுகள் கொரோனா வைரசில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கும் சர்வதேச தரவுத்தளமான GISAIDக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும், டெல்டாக்ரான் குறித்த தகவல்களைச் சர்வதேச ஆய்வாளர்கள் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை, பல முன்னணி ஆய்வாளர்கள் டெல்டாக்ரானை "ஆய்வகப் பிழை" என்றே நிராகரித்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது டெல்டாக்ரான் கேஸ்கள் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications