லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடுப்பூசியை துவங்கிய இங்கிலாந்துக்கு இப்படி ஒரு நிலைமை.. பரவுகிறது புதுவகை கொரோனா வைரஸ்.. லாக்டவுன்

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனாவுக்கு எதிரான 'பைசர்' தடுப்பூசி பயன்பாட்டை பிரிட்டன் கடந்த வாரம் துவங்கிவிட்டது.. ஆனால் அங்கு, புதுவகை கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மக்களிடையே வேகமாக பரவுகிறதாம். எனவே அங்கு பல பகுதிகளில் ஊரடங்கு போன்ற கடுமைகள் அமலுக்கு கொண்டு வரப்படுகின்றன.

பிரிட்டன் முழுவதும் அடுக்கு -3 கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கொரோனா - தனிமை முகாம்களில் தங்கவைப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கொரோனா - தனிமை முகாம்களில் தங்கவைப்பு

லண்டன் நிலவரம்

லண்டன் நிலவரம்

கிரேட்டர் லண்டன், கென்ட் மற்றும் எசெக்ஸ் ஆகியவற்றில் கொரோனா கேஸ்கள் "மிகவும் கூர்மையாக" அதிகரித்துள்ளதை ஹான்காக் சுட்டிக் காட்டினார். இது கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டால் ஏற்பட்டது. இந்த புதிய மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை கொடுக்கிறது. "ஏழு நாட்களுக்கு ஒருமுறை சில பகுதிகளில் கொரோனா கேஸ்கள் இரட்டிப்பாக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது" என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் மேலும் கூறினார்.

 மாறுபாடுள்ளது

மாறுபாடுள்ளது

"விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை" என்பது காலத்தின் தேவை என்று கூறும் அவர், "இங்கிலாந்தின் தெற்கில் இந்த மாறுபாட்டுடன் கூடிய கொரோனா வைரஸ் தாக்கியதாக, 1,000 க்கும் மேற்பட்ட கேஸ்களை நாங்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளோம், இருப்பினும் கிட்டத்தட்ட 60 வெவ்வேறு உள்ளூர் பகுதிகளில் கேஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்று ஹான்காக் பிரிட்டிஷ் எம்.பி.க்களிடம் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த புதிய வைரஸ் பரவலை உண்மை என்று கூறியுள்ளது. உயர்மட்ட அவசர நிபுணர் மைக் ரியான், ஜெனீவாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி கூறுகையில், "இங்கிலாந்தில் 1,000 நபர்களில் பதிவான இந்த மரபணு மாறுபாடு உள்ள வைரஸ் பற்றி நாங்கள் அறிவோம்" என்று கூறினார்.

பல வைரஸ்கள்

பல வைரஸ்கள்

"அதிகாரிகள் அதன் முக்கியத்துவத்தை கவனித்து வருகின்றனர், நாங்கள் பல வகை வைரஸ்களை பார்த்துள்ளோம். இந்த வைரஸும், அப்படித்தான் உருவாகி, காலப்போக்கில் மாறுகிறது" என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் மைக் ரியான் கூறியதாக தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

பாதுகாப்பு வழிமுறைகள்

தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், புதிய வகை வைரஸ்களிடமிருந்து நம்மை தக்காத்துக் கொள்ள, 6 அடி இடைவெளி விட்டு பழகுவது, முகக் கவசம் அணிவது, கைகளில் அடிக்கடி சானிட்டைசர் அல்லது சோப்பு போட்டு கழுவுவது போன்றவற்றை அனைவரும் வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்வதும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட்டமாக போகாமல் தவிர்ப்பதும் பலன் தரும் என்கிறார்கள் மருத்துவத்துறை நிபுணர்கள்.

தடுப்பூசி கட்டுப்படுத்துமா?

அதேநேரம், கொரோனா வைரஸின் இந்த புதிய மாற்றம், தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்பட முடியாதது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளோ அல்லது உலக சுகாதார அமைப்போ தெரிவிக்கவில்லை. பலனளிக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். இங்கிலாந்தில் அறிமுகமாகியுள்ள மூன்று அடுக்கு அவசரகால முறையின்படி, புதன்கிழமை முதல், மக்கள் வீட்டுக்குள் கூட்டமாக கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். பார்கள், பப்கள், உணவகங்கள் செயல்படாது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் இருக்கும். இங்கிலாந்தில் இதுவரை 18,54,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இங்கிலாந்தில் 64,268 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

English summary
From Midnight on Wednesday morning, more areas will move into Tier 3 restrictions in England due to new type of corona virus spread.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X