Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்டா கொரோனா.. Herd immunityக்கு வாய்ப்பில்லை.. வைரஸ் பரவுவதை தடுக்க வழியும் இல்லை.. புது வார்னிங்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: வேக்சின் போட்டவர்கள் மத்தியிலும்கூட டெல்டா கொரோனா பரவுவதால் தற்போதைய சூழலில் Herd immunity எனப்படும் சமூக தடுப்பாற்றலை பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று பிரிட்டன் நாட்டின் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் ஒவ்வொரு அலையாகத் தாக்கி வருகிறது. இந்த கொரோனாவில் இருந்து இதுவரை எந்தவொரு நாடும் தப்பவில்லை.

கொரோனா அச்சம் முடிந்துவிட்டதாகக் கருதிய சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும்கூட இப்போது அடுத்த அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்டா கொரோனா

டெல்டா கொரோனா

பிரிட்டன் நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனா வகை கடந்த சில மாதங்களுக்கு முன் உலக நாடுகளிடையே பரவியது. அதேபோல இந்த முறை டெல்டா கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் அதி தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வைரஸ் இப்போது 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளிடையே பரவியுள்ளது. இது உலகெங்கும் அடுத்த கொரோனாஅலையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக உள்ளது.

herd immunity

herd immunity

இந்த டெல்டா கொரோனா பாதிப்பு முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனாவை விடப் பல மடங்கு வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்படி வேகமாகப் பரவுவதால் herd immunity எனப்படும் சமூக தடுப்பாற்றல் மக்களிடையே விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

தடுக்க வழியில்லை

தடுக்க வழியில்லை

ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசிக்குத் தலைமை தாங்கிய ஆண்ட்ரூ பொல்லார்ட் இது குறித்து மேலும் கூறுகையில், "டெல்டா கொரோனாவை விட வேகமாகப் பரவக்கூடிய புதிய உருமாறிய கொரோனா உருவாகச் சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே, இந்த கொடிய கொரோனா வைரஸ் பரவுவதை முற்றிலுமாக தடுக்க எந்தவொரு வழியும் இல்லை. அதேநேரம் இதற்காக நாம் பீதியடையத் தேவையில்லை.

சாதாரண வைரஸ் போல இல்லை

சாதாரண வைரஸ் போல இல்லை

இந்த கொரோனா வைரஸ் சாதாரண வைரஸ் தொற்றைப் போன்றது இல்லை. மக்கள்தொகையில் சுமார் 95% பேருக்குத் தடுப்பூசி போட்டால் மற்ற வைரஸ்கள் பரவாது. ஆனால் இதில் நாம் அதையே உறுதியாகக் கூற முடியாது. ஏனென்றால் வேக்சின் போட்டவர்களைக்கூட டெல்டா கொரோனா பாதிப்பு தாக்குகிறது. அதாவது வேக்சின் போடாதவர்கள் மூலம் இது வேக்சின் போட்டவர்களையும் தாக்குகிறது. இந்தச் சூழலில் வைரஸ் பாதிப்பை முற்றிலுமாக தடுத்து நிறுத்த நம்மிடம் எந்தவொரு வழியும் இல்லை.

புதிய உருமாறிய கொரோனா

புதிய உருமாறிய கொரோனா

எனவே டெல்டா கொரோனா இருக்கும் வரை சமூக தடுப்பாற்றல் எனப்படும் Heard immunityக்கு வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன், அதேபோல வேக்சின் போட்டவர்களை இதைவிட அதிகமாக பாதிக்கக்கூடிய புதியதொரு உருமாறிய கொரோனா உருவாகவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், வேக்சின் எடுத்துக் கொள்வதன் மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடிகிறது. எனவே இப்போது நமக்கு அது மட்டுமே ஒரே வழி" என்றார். அதாவது கொரோனா வேக்சின் போட்டவர்கள் மத்தியிலும் கூட லேசான கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்படுவதால் இதைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர் குறிப்பிட்டார்.

50% மட்டுமே பாதுகாக்கிறது

50% மட்டுமே பாதுகாக்கிறது

அதேபோல கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் பால் ஹண்டர் கூறுகையில்,"தற்போது உள்ள வேக்சின்கள் தீவிரமான கொரோனா பாதிப்பு ஏற்படுவதையும் உயிரிழப்புகளையும் வெகுவாக தடுத்து நிறுத்துகிறது. ஆனாலும், இவை தொற்று பரவலை முற்றிலும் தடுத்து நிறுத்துவதில்லை. எனவே சமூக தடுப்பாற்றல் என்பதை நம்மால் இப்போது அடைய முடியாது, ஒருவர் இரண்டு டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டால் அதுவும்கூட 50 சதவிகிதம் மட்டுமே தொற்று ஏற்படுவதிலிருந்து ஒருவரைப் பாதிக்கிறது" என்றார்.

Recommended Video

    Vaccine ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது | Dr. E Theranirajan explain | Oneindia Tamil
    பூஸ்டர் டோஸ் தேவையில்லை

    பூஸ்டர் டோஸ் தேவையில்லை

    டெல்டா கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் அளிப்பது குறித்தும் பல்வேறு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன. லேசான கொரோனா பாதிப்பு ஏற்படுவதை வேக்சின் தடுக்காது என்பதால் இப்போது பூஸ்டர் டோஸுக்கு அவசியமில்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டு டோஸ் போட்டவர்கள் மத்தியில் உயிரிழப்புகள் குறைகிறது. இப்போது நமக்கு அதுதான் தேவை, என்றைக்கு கொரோனாவால் மருத்துவமனைகளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ அப்போது பூஸ்டர் டோஸ் போட்டால் போதும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மக்களுக்கு 2 டோஸ் வேக்சின் போடுவதற்கு முன் பூஸ்டர் டோஸ் பற்றிச் சிந்திப்பது தேவையற்றது என்றும் உலக சுகாதார அமைப்பும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+