இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு பயண கட்டுப்பாடுகளில் தளர்வு.. இன்று முதல் அமல்.. என்னென்ன தெரியுமா?
லண்டன்: 2 டோஸ் தடுப்பூசி போட்ட இந்தியர்கள் இங்கிலாந்து வரும்போது ஹோட்டலில் 10 நாள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாவது அலை பாடாய்படுத்தி விட்டது. லட்சக்கணக்கான பாதிப்புகள், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் என்று நாடே கொரோனாவில் மூழ்கி படாதபாடு பட்டது.
இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவை சிகப்பு பட்டியலில் வைத்தது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்தும் விமானங்களை இயக்குவதற்கு தடை விதித்தன.

சிகப்பு பட்டியலில் இருந்த இந்தியா
இந்தியாவில் இருக்கும் தங்கள் நாட்டு பயணிகளையும் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தின. இதேபோல் இங்கிலாந்தும் இந்தியாவை கொரோனா அதிகம் உள்ள நாடு(சிகப்பு பட்டியல்) என்ற பட்டியலில் வைத்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நாள் வரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்றால் ஹோட்டலில் 10 நாள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஹோட்டலில் தனிமை கட்டாயம் இல்லை
இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு இன்று முதல் தளர்த்தியுள்ளது. அதாவது முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்ட இந்தியர்கள் இங்கிலாந்து வரும்போது ஹோட்டலில் 10 நாள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதே வேளையில் இந்தியாவில் தடுப்பூசி போட்டு இந்தியாவிலிருந்து வரும் அனைவரும் வீட்டிலோ அல்லது அவர்கள் குறிப்பிட்ட இடத்திலோ தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனை அவசியம்
இன்று உள்ளுர்நேரப்படி 4 மணி முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து அல்லது ஐரோப்பாவில் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மட்டுமே வீட்டு தனிமைப்படுத்தல் தேவையிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு இந்தியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

லொகேட்டர் படிவம் நிரப்ப வேண்டும்
இங்கிலாந்து சென்ற பின்னர் 2 கொரோனா பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இதற்கு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். இதேபோல் பயணி இருப்பிடம் அறியும் லொகேட்டர் படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications