லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பார்க்கில் நடந்த மர்ம கொலை.. உலக நாடுகளை உலுக்கிய ஒரு பெண்ணின் மரணம்.. யார் இந்த சபீனா நெஸ்ஸா?

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டனில் சபீனா நெஸ்ஸா என்ற பெண் ஆசிரியை ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்று வருகிறது.

1989ல் அமெரிக்காவின் மான்ஹாட்டனில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் ஜாக்கிங் சென்ற பெண் வன்புணர்வு மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலக நாடுகளை உலுக்கியது. இரவு நேரத்தில் ஜாக்கிங் சென்ற பெண் ஒருவர் பார்க்கில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 1989ல் மொத்தம் 5 அப்பாவி கறுப்பின சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முறையான ஆதாரம் இன்றி பல வருடம் 5 பேரையும் சிறையில் அடைத்தது உலகம் முழுக்க கண்டனங்களை பெற்றது. கடைசியில் உண்மையாக குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதால் 13 வருட சிறை தண்டனைக்கு இந்த 5 கருப்பின சிறுவர்களும் நிரபராதி என்று கூறி விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கும், தண்டனையும் உலகம் முழுக்க கவனிக்கப்பட்டது.

முதல் உள்ளாட்சி தேர்தல்.. கட்சியினருக்கு கமல்ஹாசன் ஸ்பெஷல் அட்வைஸ்.. கையில் எடுக்கும் மெகா அஸ்திரம் முதல் உள்ளாட்சி தேர்தல்.. கட்சியினருக்கு கமல்ஹாசன் ஸ்பெஷல் அட்வைஸ்.. கையில் எடுக்கும் மெகா அஸ்திரம்

லண்டன்

லண்டன்


உலகின் பெரிய பார்க்குகளில் நடந்த கொலை மற்றும் அது தொடர்பான வழக்குகளில் சென்ட்ரல் பார்க் கொலை மிகவும் பிரபலமானது.

அந்த வகையில் சென்ட்ரல் பார்க்கில் நடந்தது போலவே லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற பார்க் ஒன்றில் பெண் ஒருவர் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு ஒன்ஸ்பேஸ் கம்யூனிட்டி சென்டர் பகுதியில் உள்ள காட்டர் பார்க்கில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அந்த பகுதியில் பணி முடித்துவிட்டு வாக்கிங் சென்ற சபீனா நெஸ்ஸா என்ற பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார். இவருக்கு 28 வயது ஆகிறது.

மண்டை

மண்டை

பின் மண்டையில் அடித்து இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பகுதியில் கடந்த 18ம் தேதி இந்த சம்பவம் நடந்து உள்ளது. இரவு இந்த கொலை நடைபெற்ற நிலையில் மறுநாள்தான் இந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரியராக இருக்கும் சபீனா நெஸ்ஸா பணி முடித்துவிட்டு இங்கே வாக்கிங் செல்வது வழக்கம் என்கிறார்கள்.

சபீனா நெஸ்ஸா

சபீனா நெஸ்ஸா

இந்த வழக்கில் சந்தேகத்தின் பெயரில் 40 வயது கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் சில மணி நேரங்களில் விடுதலை செய்யப்பட்டார். அவர் குற்றம் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதியதால் விடுதலை செய்தனர். இந்த கொலை குற்றத்தில் நிறைய முடிச்சுகள் இருப்பதால் லண்டன் போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

எப்படி நடந்தது?

எப்படி நடந்தது?

குற்றம் நடந்த நேரம் இரவு 8 -9 மணியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுவாக அந்த பார்க்கில் பலர் இருப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் சபீனா நெஸ்ஸா கொலை செய்யப்பட்டது எப்படி என்ற கேள்வி லண்டன் போலீசாருக்கு எழுந்து உள்ளது. இந்த பெண்ணின் பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடல் முழுக்க பல இடங்களில் காயம் உள்ளது.

 குற்றவாளி

குற்றவாளி

இந்த பெண் இறந்து 4 நாட்கள் ஆகியும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக மீடியாக்களின் கவனத்தை சபீனா நெஸ்ஸா மரணம் உலுக்கி உள்ளது. சர்வதேச நாடுகள் பல இவரின் மரணம் குறித்து கண்டனம் தெரிவிக்க தொடங்கி உள்ளன. பெண் அமைப்புகள் பல இதில் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளன. இவரின் பிரேத பரிசோதனை முடிவுகளில் எப்படி மரணம் நேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.

 சிசிடிவி

சிசிடிவி

இதுவும் இந்த வழக்கு குழப்பத்தை ஏற்படுத்த ஒரு காரணம் ஆகும். பிரேத பரிசோதனை முடிவுகள் தெளிவின்றி இருக்கின்றன. சிசிடிவி ஆதாரங்கள் எதுவும் இல்லை. பார்க்கில் எப்படி கொலை செய்யப்பட்டார் என்றும் தெரியவில்லை. குற்றவாளி குறித்த க்ளூவும் இல்லை என்பதால் இந்த வழக்கு சர்வதேச மீடியாக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

அதே சம்பவம்

அதே சம்பவம்

1989ல் சென்ட்ரல் பார்க்கில் ஜாக்கிங் சென்ற பெண் வன்புணர்வு மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலவே கிட்டத்தட்ட இந்த சம்பவமும் உள்ளது. அந்த வழக்கிலும் அப்போது குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் காவலாளிகள் திணறினார்கள். இந்த நிலையில் அதேபோல் ஒரு பெண், அதுவும் கறுப்பின லண்டனில் கொல்லப்பட்டு இருக்கிறார். இவர் கொலை செய்யப்பட்டது கூட எப்படி என்று கூட தெரியாத காரணத்தால் மக்கள் அங்கு கொதித்து போய் உள்ளனர். கறுப்பின மக்களும், பெண்களும் சபீனா மரணத்திற்கு நீதி வேண்டி லண்டனில் பல்வேறு பகுதிகளில் போராடி வருகிறார்கள்.

English summary
London: Why Sabina Nessa murder shakes world media all of a sudden?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X