லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிறப்பு உறுப்பில் புண்கள்! ரொம்ப வித்தியாசமாக உள்ள அறிகுறிகள்! கொரோனவை ஓவர்டேக் செய்யுமா மங்கிபாக்ஸ்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் நாட்டில் நடந்த மங்கி பாக்ஸ் குறித்த ஆய்வில் சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பே இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பலகட்ட முயற்சிக்குப் பின்னர், மக்கள் இப்போது தான் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்தச் சூழலில், மங்கி பாக்ஸ் பாதிப்பு குறித்த செய்தி கடும் அச்சத்தைத் தருவதாக அமைந்துள்ளது. ஆப்பிரிக்காவுக்கு வெளியே பல நாடுகளில் மங்கி பாக்ஸ் பாதிப்பு சமீப காலத்தில் அதிகரித்து உள்ளது.

 கொரோனாவை போலவே மங்கி பாக்ஸ்? அப்போ இது தான் அடுத்த பெருந்தொற்றா! சில நாட்களில் WHO முக்கிய ஆலோசனை கொரோனாவை போலவே மங்கி பாக்ஸ்? அப்போ இது தான் அடுத்த பெருந்தொற்றா! சில நாட்களில் WHO முக்கிய ஆலோசனை

 மங்கி பாக்ஸ்

மங்கி பாக்ஸ்

மங்கி பாக்ஸ் ஆப்பிரிக்க நாடுகளில் அவ்வப்போது அதிக கேஸ்களை ஏற்படுத்தும் என்றாலும் கூட, ஆப்பிரிக்காவைத் தாண்டி கடந்த காலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டது இல்லை. இப்போது ஏன் மங்கி பாக்ஸ் இந்தளவு வேகமாகப் பரவுகிறது என்பதற்குத் தெளிவான காரணங்களை ஆய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஆய்வு

ஆய்வு

மங்கி பாக்ஸ் குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது. அதன்படி பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வில் மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்ட 12 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் இவர்களுக்குப் பிறப்புறுப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தோல் புண்கள் அதிகமாக இருப்பதையும் சோர்வு மற்றும் காய்ச்சல் குறைவாக இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 பிறப்பு உறுப்பு

பிறப்பு உறுப்பு

நோயாளிகளின் பிறப்பு உறுப்பு தோல்களில் புண்கள் அதிகம் உள்ளதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இது தொடர்பாகப் பிரிட்டன் மருத்துவர் நிக்கோலோ ஜிரோமெட்டி கூறுகையில், "தற்போது பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இவர்களில் யாரும் சமீப காலங்களில் மங்கி பாக்ஸ் அதிகம் உள்ள நாடுகளுக்குச் செல்லவில்லை. இது புதிராகவே உள்ளது" என்றார்.

Recommended Video

    Monkey Pox.. தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை!
     உடலுறவு

    உடலுறவு

    அதேபோல உடலுறவு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த நோயாளிகளில் 90 சதவீதம் பேர், தங்களுக்கு அறிகுறி ஏற்படுவதற்கு மூன்று வாரங்களில் புதிய நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகத் தெரிவித்தனர். மேலும், இந்த காலகட்டத்தில் அனைத்து நேரங்களிலும் அவர்கள் ஆணுறை பயன்படுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களில் 50% அதிகமானோர், மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்படுவதற்கு 12 வாரங்களில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் உடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

    புண்கள்

    புண்கள்

    நோயாளிகள் அனைவரும் மங்கி பாக்ஸ் அறிகுறிகள் இருந்துள்ளது. அதேபோல 94 சதவீத நோயாளிகளின் பிறப்பு உறுப்பு பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தோல் புண் இருந்துள்ளது. இவர்களில் பெரும்பாலான நோயாளிகளுக்கு எவ்வித கூடுதல் சிகிச்சையும் இல்லாமல் குணமடைந்துவிட்டனர். அவர்களில் 5 பேருக்கு மட்டுமே மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.

     அறிகுறி இல்லை

    அறிகுறி இல்லை

    அதேபோல மற்ற நாடுகளில் மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்ட போது, அங்குக் கண்டறியப்பட்ட பாதிப்பைக் காட்டிலும் இங்குப் பாதிப்பு வித்தியாசமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், அவர்களில் 18 சதவீத நோயாளிகள் தோல் புண்கள் தொடங்குவதற்கு முன்பு எந்த ஆரம்ப அறிகுறிகளையும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வித்தியாசம்

    வித்தியாசம்

    முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனாவை போலவே மங்கி பாக்ஸை சுகாதார அவசர நிலையாக அறிவிப்பது குறித்து உலக சுகாதார மையம் ஆய்வு நடத்தி இருந்தது. தற்போதைய சூழலில் மங்கி பாக்ஸ் வேகமாகப் பரவுகிறது என்றாலும் கூட சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Symptoms of monkeypox patients in the UK differ from those observed in previous outbreaks: (மங்கி பாக்ஸ் பாதிப்பு குறித்து வெளியான புதிய ஆய்வு முடிவுகள்) Monkeypox latest research updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X