துடிக்கும் மக்கள்.. முடக்கம்.. ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் "வெப்ப அலை".. உண்மையான காரணம் என்ன?
லண்டன்: சமீப நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. நிலநடுக் கோட்டிற்கு மேலே உள்ள இந்த நாடுகள் குளிர் பிரதேச நாடுகளாகும். ஆண்டின் சரிபாதி நாட்களுக்கும் மேலாக உறை பனியில் உழன்றுகொண்டிருக்கும் இந்த நாடுகளில் தற்போது வெப்பம் மற்றும் வெப்ப அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் குறித்து ஆய்வாளர் சில விசயங்களை பட்டியலிட்டுள்ளனர்.
தற்போது இந்த பகுதியில் சுமார் 40 டிகிரிக்கு மேல் வெப்பம் வாட்டியெடுக்க தொடங்கியுள்ளது. இந்த வெப்பம் நமக்கு இயல்பானதாகவே தோன்றலாம். ஏனெனில் கோடைக்காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதை விட அதிக அளவு வெப்பம் பதிவாகும்.

புவியியல் அமைப்பு
ஆனால் பிரிட்டனுக்கு இது புதுசு. இந்த அதிக வெப்பம் அனல் காற்றை உருவாக்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மட்டுமல்லாது ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் பாதையில் உள்ள லெவல் கிராசிங்கில் சேதம் ஏற்பட்டுள்ளது.அதீத வெப்பம் காரணமாக தண்டவாளங்கள் இளகியுள்ளன. லெவல் கிராசிங்கில் உள்ள சிக்னல் மேல் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் லேசான பிலாஸ்டிக் உருகியுள்ளது. அப்படியெனில் வெப்பம் எந்த அளவு இருக்கும் என யோசித்து பாருங்கள்.

பாதிப்புகள்
இந்த வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏராளமான வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு குடிசை வீடு தீப்பிடித்து எரிகிறது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள காடு தீப்பிடித்து எரிவதும் தெளிவாக தெரிகிறது. இதற்கிடையில் திரையரங்கு ஒன்றில் திடீரென தீப்பிடித்துள்ளது. ஆனால் அவசரக்கால அலாரம் வேலைசெய்யவில்லை. இதனால் தீயை அணைக்கும் பணியின்போது பொதுமக்களும் தண்ணீரில் நனைந்தனர்.

புவி வெப்பமடைதல்
புவி வெப்பமடைதல்தான் இவ்வாறான நிகழ்வுகளுக்கு காரணம் என நடிகர் ஜார்ஜ் ஃபோராக்ரேஸ் ட்விட்டரில் தியேட்டரில் ஏற்பட்ட தீவிபத்தை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். திரையரங்குகள் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் அந்நாட்டு தீயணைப்பு வீரர்களை தொடர்ந்து சோர்வுக்கு உள்ளாக்கியுள்ளது. செவ்வாய் கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்கள்
அதேபோல வெப்பநிலையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பெற்றோர்களுக்கும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக பயணிகள் ரயில் நிலையங்கள் நீண்ட நேரமாக காத்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த அதீத வெப்பத்திற்கு உலக வெப்ப மயமாதல்தான் காரணம் என ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

வெப்ப அலை
கடந்த 19ம் நூற்றாண்டை விட தற்போது அதிக அளவில் வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் இதர பசுமை இல்ல வாயுக்களின் காரணமாக ஐரோப்பா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சுமார் 1.1 பாரன்ஹீட் வெப்பநிலை அதிகரித்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது இந்த வெப்பக்காற்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸை தாக்கியுள்ளது. இந்த வெப்ப அலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை போர்த்துகல் கடல் பகுதியில் உருவாக்கியுள்ளது. இந்த வெப்ப அலை, காற்றில் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் வட ஆப்பிரிக்காவில் உள்ள காற்றை இது ஐரோப்பா நோக்கி நகர்த்துகிறது. தற்போது நிலவுவது ஒரு வெப்ப அலை அல்ல, அது இரண்டு என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

காரணம்
தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலை, அதனால் உருவாகும் காற்றழுத்தம் இவைகூட வெப்ப அலை உருவாவதற்கு காரணமாக இருக்கலாம் என ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் இன்ஸ்டிடியூட் ஃபார் காலநிலை ஆராய்ச்சியின் மூத்த விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான எஃபி ரூசி கூறியுள்ளார். மேலே குறிப்பிட்டதைப்போல உயரும் வெப்பநிலையானது ஆர்டிக் பகுதியை கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாக ஆர்டிக் பகுதியிலிருந்து நிலநடுக்கோடு வரையிலான பகுதிகளில் கால நிலைமாற்றம் ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆர்டிக்
மேலும் ஆர்டிக் மட்டுமல்லாது உலகின் முக்கிய கடல் நீரோட்டங்களில் ஒன்றான அட்லாண்டிக் மெரிடியனல் ஓவர்டர்னிங் சர்குலேஷனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வானிலையை மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. பொதுவாக சராசரியான வெப்பநிலையானது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மேலே கொண்டு செல்லும் இது குளிர்ச்சியை உருவாக்கும். ஆனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவும் வெப்பநிலையானது மண்ணின் ஒட்டுமொத்த ஈரப்பதத்தையும் ஊறிஞ்சி எடுத்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications