"இந்து என்பதில் எப்போதும் பெருமை..!" பிரதமரான பின் மனம் திறந்த ரிஷி சுனக்! என்ன சொன்னார் பாருங்க
லண்டன்: பிரிட்டன் நாட்டின் முதல் இந்து பிரதமராக உள்ள ரிஷி சுனக் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பிரிட்டன் பிரதமராகக் கடந்த செப். மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ் எடுத்து சில நடவடிக்கைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால் உட்கட்சியிலேயே எதிர்ப்பு அதிகரித்ததால் அவர் வெறு வழியின்றி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்தி வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானார்.

ரிஷி சுனக்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராவது இதுவே முதல்முறை. பிரிட்டன் பொருளாதாரம் இப்போது இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், அதை மீட்கும் நடவடிக்கையில் அவர் இறங்கி உள்ளார். தொடக்கம் முதலே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் ரிஷி சுனக், பல துறைகளுக்கு அமைச்சர்களை மாற்றினார். இருப்பினும், நிலைமை சரியாகக் குறைந்தது சில மாதங்களாவது ஆகும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்து என்பதில் பெருமை
அதேநேரம் பிரிட்டன் நாட்டின் முதல் இந்து பிரமதர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். தான் இந்து என்பதை எப்போதும் பெருமையாகச் சொல்லும் ரிஷி சுனக், தான் பிரதமர் பதவிக்கு வருவது பிரிட்டனின் பன்முகத்தன்மையைக் காட்டுவதாகத் தெரிவித்து உள்ளார். 42 வயதான ரிஷி சுனக், கடந்த மாதம் பிரதமர் பதவிக்குத் தேர்தல் நடந்த போது போரிஸ் ஜான்சன் தன்னை விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரிஷி சுனக் பேட்டி
இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ரிஷி சுனக் கூறுகையில், "போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் என்னிடம் வந்து பேசினார். இருப்பினும், நிதியமைச்சராக இருந்த போது எனது செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை நான் விளக்கினேன். பிரிட்டனில் இப்போது விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் இன்னலை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்போது நாட்டை வழிநடத்தச் சரியான நபராக நான் இருப்பேன் என்பதை அவரிடம் விளக்கினேன்.

தீபாவளி
இப்போது பிரிட்டன் பிரதமராக நான் இருக்கிறேன். இங்குப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இப்போது நான் தீபாவளி கொண்டாட நிகழ்ச்சியை நடத்துகிறோம். இதை நினைத்தால் அற்புதமாக உள்ளது. இந்து என்பதில் எனக்குப் பெருமை. இது இங்குள்ள பலருக்கும் பெரும் நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்து உள்ளது. பிறமதாராகத் தீபாவளி பண்டிகையில் தீபங்களை ஏற்றுவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தான் தருகிறது.

எதுவும் சாத்தியம்
பிரிட்டனில் எதுவும் சாத்தியம் என்பதையே இது காட்டுகிறது. இங்கு எதுவும் பெரிய விஷயம் இல்லை. நாடு முழுவதும் இதை நினைத்து நிச்சயம் பெருமை கொள்ளும் என்றே நான் நினைக்கிறேன். இந்த கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை அதிகம் இருக்கிறது. பிரிட்டன் பொருளாதாரம் இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. அதைச் சரி செய்ய விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன் என்னிடம் வந்து பேசினார். ஆனால், எனக்கு ஆதரவு எந்தளவுக்கு உள்ளது என்பதை நான் அவரிடம் விளக்கினேன். மேலும், இப்போது அதிகரிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நான் சரியான நபராக இருப்பேன். வரும் காலத்தில் நிச்சயம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்" என்றார். முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸை வெளிப்படையாக விமர்சிப்பதைத் தவிர்த்த ரிஷி சுனக், முந்தைய தவறுகளைச் சரி செய்வேன் என மட்டும் தெரிவித்தார்.

கோயில் பாத பூஜை
ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைத் தான் திருமணம் செய்துள்ளார். தான் இந்து என்பதில் பெருமை கொள்வதாக ரிஷி சுனக் பல முறை கூறியுள்ளார். அங்குள்ள இஸ்கான் கோயிலுக்கும் அடிக்கடி செல்லும் அவர், சில மாதங்களுக்கு முன் பசு பூஜையும் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications