பிரிட்டன் புதிய பிரதமர் யார்?.. ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பு இருக்கிறதா? இன்று வாக்கு எண்ணிக்கை!
லண்டன்: இங்கிலாந்தில் அடுத்த பிரதமருக்கான தேர்தல் முடிவு இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும் அவர் வெற்றி பெற்றால் பிரிட்டன் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை பெறுவார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, இங்கிலாந்தில் புதிய பிரதமருக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
பிரிட்டனின் புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று தற்போது இறுதி வேட்பாளராக முன்னேறினார்.

பிரிட்டன் அடுத்த பிரதமர்
இதனால் பிரிட்டன் புதிய பிரதமர் ஆகும் வாய்ப்பு இவருக்கே இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக இவருக்கு போட்டியாக களமிறங்கிய 46 வயதான லிஸ் டிரஸ் இந்த பிரதமர் தேர்தலில் முன்னிலை பெற்றார். கருத்துக்கணிப்புகள் எல்லாம் அவருக்கு சாதகமாக வந்தன. எனினும் களத்தில் 2 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் இதில் ஒருவர் தான் பிரிட்டன் அடுத்த பிரதமர் என்பது உறுதியாகிவிட்டது.

இன்று முடிவுகள் அறிவிப்பு
பிரதமர் பதவிக்கான போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை, திடீர் திருப்பமாக லிஸ் டிரஸ் முந்துவதாக தகவல்கள் கூறப்பட்டது. கடந்த 2 மாதங்களாக கன்சர்வேட்டிவ் கட்சியின் டோரி உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமையுடன் முடிந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வெற்றி பெற்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும்..
லண்டன் நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் தற்போது பிரதமராக இருக்கும் போரிஸ் ஜான்சனுடன் சேர்ந்து இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்திப்பார்கள். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெறும். அதன்பிறகு பிரிட்டனின் அடுத்த பிரதமர் முறைப்படி பொறுப்பேற்பார்.

முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமை
இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் பிரிட்டன் பிரதமர் ஆகும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமை அவருக்கு கிட்டும். இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனர் நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி தம்பதியின் மருமகனான ரிஷி சுனக்கிற்கு வெற்றி வாய்ப்பு மங்கியிருப்பதால், இதற்கான வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. பொருளாதார நெருக்கடியை பிரிட்டன் எதிர்கொண்டு வரும் இந்த சமயத்தில் புதிய பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நபருக்கு கடும் சவாலான பணிகள் காத்திருப்பதாகவே தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications