13 நாள்.. ஆசிரமத்திலேயே பெண் கூட்டு பலாத்காரம்.. மயக்க மருந்து கொடுத்து 4 பேர் வெறிச்செயல்.. ஷாக்
லக்னோ: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள ஆசிரமத்துக்கு சென்ற பெண்ணை அறையில் அடைத்து வைத்து மயக்கமருந்து கொடுத்து 4 பேர் தொடர்ந்து 13 நாட்கள் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ கோமதி நகரில் ஜானகி மந்திர் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே உள்ள கர்ச்சனாவை சேர்ந்த 55 வயது பெண், கீதா என்ற பெண்ணோடு ஆசிரமம் செல்ல முடிவு செய்தார்.

ஆசிரமம் சென்ற பெண்கள்
இதைடுத்து 55 வயது பெண், கீதாவுடன் அக்டோபர் மாதம் 4ம் தேதி ஆசிரமத்துக்கு சென்றனார். ஆசிரமத்தில் உள்ள ஹனுமான் தாஸ் மஹந்தை சந்திக்க முயன்றனர். ஆனால் அவர்களால் சந்திக்க முடியவில்லை. இதற்கிடையே தான் சகோதரருக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி கீதா ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டு பிரயாக்ராஜூக்கு சென்றார். 55 வயது பெண் மட்டும் ஆசிரமத்தில் தங்கினார்.

பெண் தொடர் பலாத்காரம்
இந்த வேளையில் ஆசிரமத்தில் துர்வாசா, சோட்டே மவுனி, பரே மவுனி, மன்மோகன் தாஸ் உள்ளிட்டவர்கள் 55 வயது பெண்ணை தனியாக அழைத்து சென்று அடைத்து வைத்துள்ளனர். மேலும் அவருக்கு மயக்க மருந்துகளை வலுக்கட்டாயமாக கொடுத்து மயக்க நிலையில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரமத்தில் இருந்து அவரை வெளியே செல்ல முடியாத வகையில் அடைத்து வைத்து 4 பேரும் தொடர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

13 நாள் தொடர் தொல்லை
இந்நிலையில் 4 பேரும் ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில் 55 வயது பெண் அங்கிருந்து வெளியே ஓடிவந்தார். மேலும் அவர் அருகே உள்ள கோமதிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரில், போதைப்பொருட்கள் கொடுத்து மயக்கமடைய செய்து 4 பேரும் பலாத்காரம் செய்தனர். 13 நாட்கள் வரை மிரட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். அதோடு சம்பவம் குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

போலீஸ் தீவிர விசாரணை
இந்த புகாரின் அடிப்படையில் கோமதி நகர் போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அவர்கள் தலைமறைவாக உள்ளனர். இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்கள் 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே ஆசிரமத்துக்கு சென்ற பெண்ணை அறையில் அடைத்து வைத்து போதைப்பொருட்கள் கொடுத்து 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications