அடடே... உ.பி. சட்டசபை தேர்தலில் யோகியை தொடர்ந்து முதல் முறையாக அகிலேஷ் யாதவ் போட்டியாமே?
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் இதுவரை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது இல்லை. தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது இல்லை. இருவரும் எம்.எல்.சியாக முதல்வர் நாற்காலியில் இருந்தனர்.
இத்தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். 1991-ம் ஆண்டு முதல் கோரக்பூர் பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. முன்னதாக யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது.

அகிலேஷ் யாதவ் போட்டி
அதேபோல் சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவது இல்லை என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். தற்போது அகிலேஷ் யாதவும் சட்டசபை தேர்தலில் களம் காணப் போவதாக கூறப்படுகிறது. அகிலேஷ் யாதவ், Azamgarh லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

ஓபிசி தலைவர்கள்
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய லோக் தள் மற்றும் ராஜ்பாரின் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 3 அமைச்சர்கள் உள்ளிட்ட பல பாஜக எம்.எல்.ஏக்கள் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

கருத்து கணிப்புகளின் ஆரூடம்
உ.பி. தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதேநேரத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி பாஜகவுக்கு நெருக்கடி தரும் வகையில் கணிசமான இடங்களை அள்ளும் என்றும் அந்த கருத்து கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. இதர பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்கள் அலை அலையாக அகிலேஷ் கட்சியில் இணைவதால் களநிலவரம் தலைகீழாக மாறவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

அகிலேஷ் எந்த தொகுதியில் போட்டி?
அகிலேஷ் யாதவ் போட்டியிட வாய்ப்புள்ளதாக 4 தொகுதிகளை சுட்டிக்காட்டுகின்றனர் சமாஜ்வாதி கட்சியினர். மெயின்பூர், கன்னோஜ், கோபால்பூர் மற்றும் குன்னார் ஆகிய 4 தொகுதிகளில் ஒன்றில் அகிலேஷ் யாதவ் போட்டியிடக் கூடுமாம். மேற்கு உ.பி.யில்தான் சமாஜ்வாதியின் செல்வாக்கு அதிகம். அதனால் மேற்கு உ.பி.யில் உள்ள ஒரு தொகுதியையே அகிலேஷ் தேர்வு செய்வார் என்கின்றன சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications