நீங்கள் நினைத்தால் முடியும்..மோடியுடன் பேசுங்க..தர்பார் பட வில்லன் யோகியிடம் வைத்த முக்கிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இந்தி திரையுலகம் மீதான வெறுப்பை நீக்க உதவ வேண்டும் என்றும் இது தொடர்பாக பிரதமரிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசிய தர்பார் பட வில்லன் சுனில் ஷெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களை மும்பையில் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார். அப்போது இந்த கோரிக்கையை சுனில் ஷெட்டி விடுத்துள்ளார்.

பாலிவுட் திரைப்படங்களில் இந்து மதத்திற்கு எதிரான காட்சிகளும் கருத்துக்களும் பரப்பப்படுவதாக சமீப காலமாக குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் கூட இந்த சர்ச்சைகளில் சிக்குகின்றன. விரைவில் திரைக்கு வர இருக்கும் ஷாருக்கானின் பதான் படம் கூட இந்த சர்ச்சையில் சிக்கியது.

பதான் திரைப்பட சர்ச்சை

பதான் திரைப்பட சர்ச்சை


பதான் படத்தில் இடம் பெற்றிருக்கும் பேஷ்ராம் ரங் என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் காட்சியில் தீபிகா படுகோன் காவி உடை அணிந்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்துத்வா அமைப்புகள் கடுமையாக மிரட்டல் விடுத்து இருந்தன. அதேபோல் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 'பாலிவுட் பாய்காட் ' என டிரெண்டிங் செய்யப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் பேசி..

பிரதமர் மோடியுடன் பேசி..

இந்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, பாய்காட் டிரெண்டிங் குறித்து தனது ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார். இது தொடர்பாக நில் ஷெட்டி கூறுகையில், ''பாய்காட் பாலிவுட் என்ற டிரெண்ட் திரையுலகினை கடுமையாக பாதிக்கிறது. எனக்கும் கூட மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது. எனவே இதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்தால் இந்த டிரெண்ட் நின்றுவிடும். பிரதமர் மோடியுடன் பேசி இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுங்கள்.

நீங்கள் சொன்னால் மக்கள் கேட்பார்கள்

நீங்கள் சொன்னால் மக்கள் கேட்பார்கள்

பாய்காட் பாலிவுட் டிரெண்டிற்கு நாம் இணைந்து முடிவு கட்ட வேண்டும். நாங்கள் யாரையும் காயப்படுத்தும் வகையில் செயல்படவில்லை. எனவே இந்த களங்கத்தில் இருந்து எங்களை காப்பாற்றும் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். நீங்கள் சொன்னால் மக்கள் கேட்பார்கள்" என்றார். மகாராஷ்டிரா மாநிலம் வருகை தந்திருந்த யோகி ஆதித்யநாத்தை திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சுனில் ஷெட்டி யோகி ஆதித்யநாத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

யார் இந்த சுனில் ஷெட்டி?

யார் இந்த சுனில் ஷெட்டி?

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சுனில் ஷெட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒரு நடிகராக உள்ளார். ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்துள்ளார். ஏராளமான பாலிவுட் படங்களிலும் சுனில் ஷெட்டி நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் சுனில் ஷெட்டி நடித்து வருகிறார். சுனில் ஷெட்டியின் மகளான ஆதியா ஷெட்டியும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+