லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொழிலாளர் சட்டங்களுக்கு 3 வருட விலக்கு.. உ.பி அரசு பரபரப்பு உத்தரவு.. ஊழியர்கள் அதிர்ச்சி!

உத்தர பிரதேசத்தில் பல்வேறு தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பல்வேறு தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுக்க 40 நாட்களுக்கும் அதிகமாக லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிய வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்கள் புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் உத்தர பிரதேச அரசு புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் பல்வேறு தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தண்டனைக் கைதிகளை பயன்படுத்தக் கோரிய வழக்கு ஹைகோர்டில் தள்ளுபடிகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தண்டனைக் கைதிகளை பயன்படுத்தக் கோரிய வழக்கு ஹைகோர்டில் தள்ளுபடி

மூன்று வருட சட்டம்

மூன்று வருட சட்டம்

அடுத்த மூன்று வருடங்களுக்கு அங்கு தொழிலாளர் சட்டம் செயல்படாது என்று அறிவித்துள்ளது. முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 38 தொழிலாளர் சட்டங்களுக்கு அங்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 4 சட்டங்கள் மட்டும் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4 சட்டங்கள்

4 சட்டங்கள்

அதன்படி அடிப்படை ஊதியம் 1936 சட்டம், தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம், 1932, பாண்ட் தொழிலாளர் அமைப்பு (ஒழிப்பு) சட்டம், 1976, மற்றும் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், 1996 ஆகிய சட்டங்கள் மட்டும் அங்கு அமலில் இருக்கும். இதனால் மீதம் இருக்கும் சட்டங்களாக தொழிற்சங்கம் சட்டங்கள், போராடும் உரிமைக்கான சட்டங்கள்.

பெரிய அதிர்ச்சி

பெரிய அதிர்ச்சி

ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள், தொழிற்சாலை பாதுகாப்பு சட்டங்கள் எல்லாம் நீக்கப்படுகிறது. இதனால் அம்மாநில ஊழியர்கள் எல்லோரும் தங்கள் உரிமையை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளனர். இதனால் இவர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு எதிராக அங்கு போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

ஆதித்யநாத் முடிவு

ஆதித்யநாத் முடிவு

அதே சமயம் இன்னொரு பக்கம் அங்கு இந்த சட்டம் காரணமாக முதலீடு அதிகரிக்கும் என்று அரசு கூறுகிறது. எங்கள் மாநிலத்தில் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்ய எங்கள் மாநிலம் மீது ஆர்வம் செலுத்தும். பொருளாதார சரிவை சரி செய்ய இதுவே இப்போது நல்ல வழி என்று அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

English summary
Coronavirus: Labour laws abolished in Uttar Pradesh with 3 exemptions to attract investments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X