லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தரப்பிரதேசத்தில் ‘ஒர்க் அவுட்’ ஆகவில்லையா மாயாவதி- அகிலேஷ் கூட்டணி?

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக கூட்டணிக்கே வெற்றி ! சி வோட்டர் அதிரடி கணிப்பு!

    லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பரம வைரிகளாக இருந்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி இரு கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணி அமைத்தும் கூட பாஜகவை வீழ்த்த முடியவில்லை என்கின்றன தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.

    லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் ஒற்றை குறிக்கோள் என மாநில கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு கூட்டணி அமைத்தன. உத்தரப்பிரதேசத்தில் இரு துருவங்களாக இருந்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் மெகா கூட்டணியை உருவாக்கின.

    இக்கூட்டணியானது யாதவர்கள், தலித்துகள், சிறுபான்மையினர் வாக்குகளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் கொண்டு வந்து சேர்க்கும்; இரு கட்சிகளின் வாக்கு சதவீதம் இணையும் போது பாஜக பல தொகுதிகளில் படு தோல்வியைத்தான் சந்திக்கும் என கணிக்கப்பட்டது.

    Exit poll: அதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம் Exit poll: அதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்

    சாதிக்காத கூட்டணி?

    சாதிக்காத கூட்டணி?

    ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி அப்படி ஒன்றும் சாதித்துவிடாது; வழக்கம் போல பாஜகவுக்கு உத்தரப்பிரதேசம் ஆதரவு தரும் என்றே கூறுகின்றன. உத்தரப்பிரதேசம் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள்

    மெகா கூட்டணிக்கு குறைவு?

    மெகா கூட்டணிக்கு குறைவு?

    உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக 72 இடங்களைக் கைப்பற்றியது. மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உத்தரப்பிரதேசம்தான் கை கொடுத்தது. இந்த முறை அதே அளவு இடங்களை பாஜக கைப்பற்றாது எனினும் பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சி வெல்லும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். ரிபப்ளிக்-சிவோட்டர் கருத்து கணிப்பில் பாஜக 38; பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி40 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

    மெகா கூட்டணிக்கு குறைவு?

    மெகா கூட்டணிக்கு குறைவு?

    உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக 72 இடங்களைக் கைப்பற்றியது. மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உத்தரப்பிரதேசம்தான் கை கொடுத்தது. இந்த முறை அதே அளவு இடங்களை பாஜக கைப்பற்றாது எனினும் பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சி வெல்லும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். ரிபப்ளிக்-சிவோட்டர் கருத்து கணிப்பில் பாஜக 38; பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி40 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

    பாஜக வசம் 57 தொகுதிகள்?

    பாஜக வசம் 57 தொகுதிகள்?

    டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்து கணிப்பில் பாஜக-58; பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி 20; ரிபப்ளிக்- ஜன்கிபாத்- பாஜக 46 முதல் 57; பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி 21-32 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது.

    பாஜகவுக்கு 68 இடங்கள்?

    பாஜகவுக்கு 68 இடங்கள்?

    இந்தியா டுடே- ஆக்சிஸ் எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக 62 முதல் 68 இடங்களையும் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி அணிக்கு 10 முதல் 16 இடங்கள்தான் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் சி.என்.என்.-நியூஸ் 18- ஐபிஎஸ்ஓஎஸ் முடிவுகளில் பாஜகவுக்கு 60 முதல் 62 இடங்களும் மெகா கூட்டணிக்கு 17 முதல் 19 இடங்களும்தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜகவுக்கு 22 இடம்?

    பாஜகவுக்கு 22 இடம்?

    ஆனால் ஏபிபி-ஏசி நீல்சன் கருத்து கணிப்பானது பாஜகவுக்கு 22 இடங்களும் பகுஜன் சமாஜ் -சமாஜ்வாதி கூட்டணிக்கு 56 இடங்கள் கிடைக்கும் என்கிறது. நியூஸ் 24- சாணக்கியாவில் பாஜகவுக்கு 65, இந்தியா டிவி-சிஎன்எக்ஸில் 50 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளானது, பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி முயற்சி கை கொடுக்கவில்லை; பாஜகவின் வெற்றியை அது தடுத்த நிறுத்த முடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன.

    English summary
    The Grand Alliance of Akhilesh Yadav and Mayawati may not be able to stop the BJP march through Uttar Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X