அரசியல் புயலை கிளப்பிய உ.பி. முசாபர்நகர் விவசாயிகள் மாநாடு- பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி திடீர் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

ல்கனோ: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் ஒன்று திரண்டது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வில் புயலைக் கிளப்பியுள்ளது. உ.பி. பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி, ரத்தமும் சதையுமான நமது விவசாயிகள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய விவசாய சட்டங்களுக்கு நாடு முழுவதும் மிகக் கடுமையான எதிர்ப்பு தொடருகிறது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிரோமணி அகாலி தளம், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்தும் மத்திய அரசில் இருந்தும் வெளியேறியது.

 அடுத்த ஆண்டு சட்டசப்பை தேர்தல்கள்

அடுத்த ஆண்டு சட்டசப்பை தேர்தல்கள்

மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் 9 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், உத்தரகாண்ட், ஹரியானா, உ.பி. மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளே தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இதனால் அந்தந்த மாநில அரசியலிலும் இந்த போராட்டம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரகாண்ட், உ.பி. சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இத்தேர்தல்களில் விவசாய சட்டங்களும் டெல்லி விவசாயிகள் போராட்டமும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

 முசாபர்நகர் மாநாடு

முசாபர்நகர் மாநாடு

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் தேர்தல் களத்தில் போட்டியிடக் கூடும் என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இன்னொரு பக்கம் பாஜகவை வீழ்த்த பொதுவான வியூகத்தை விவசாயிகள் கையில் எடுப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதற்காகவே உ.பி.யின் முசாபர்நகரில் இன்று மிக பிரமாண்டமான மகா பஞ்சாயத்து அல்லது மாநாட்டை விவசாயிகள் கூட்டி இருந்தனர். 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கில் முசாபர்நகரில் விவசாயிகள் திரண்டனர். விவசாயிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டிருந்தன. இதனால் முசாபர்நகரமே இன்று முடங்கிப் போனது. முசாபர்நகரில் திரண்ட விவசாயிகள் கூட்டம், அத்தனை அரசியல் கட்சிகளையும் மிரட்டி விட்டிருக்கிறது

 போராட்டம் ஓயாது

போராட்டம் ஓயாது

இம்மாநாட்டில் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் தியாகத், டெல்லியில் நாங்கள் போராடும் எல்லை பகுதிகளில் இருந்து ஒருபோதும் வெளியேற மாட்டோம். எங்கள் உயிரே போனாலும்கூட போராட்ட களத்தை விட்டு வெளியேறப் போவது இல்லை. தேவைப்பட்டால் எங்கள் உயிரையும் நாங்கள் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். விவசாய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறாமல் டெல்லி போராட்ட களத்தை கைவிடமாட்டோம் என்றார்.

 அரசியலில் எதிரொலி

அரசியலில் எதிரொலி

இதனிடையே முசாபர்நகர் மாநாடு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முசாபர்நகர் தொகுதி எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சஞ்சீவ் பல்யான் கூறுகையில், விவசாய சங்கங்கள் அரசியலுக்கு வர விரும்பினால் தாராளமாக வரலாம். அவர்களை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம் என்றார். அதேபோல் மற்றொரு உ.பி. எம்.பி.யான வருண் காந்தி, திடீரென டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார்.

 வருண் காந்தி திடீர் ஆதரவு

வருண் காந்தி திடீர் ஆதரவு

தமது ட்விட்டர் பக்கத்தில் முசாபர்நகர் மாநாடு வீடியோவை பதிவிட்டுள்ள வருண் காந்தி, லட்சக்கணக்கான விவசாயிகள் இன்று முசாபர்நகரில் ஒன்று திரண்டுள்ளனர். அவர்கள் நமது ரத்தமும் சதையுமானவர்கள். இந்த விவசாயிகளுடன் மரியாதைக்குரிய வகையில் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த விவசாயிகளின் துயரத்தை வலியை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். வருண் காந்தியின் இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. வருண்காந்தியின் பிலிபித் லோக்சபா தொகுதியில் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர். இவர்கள்தான் டெல்லி போராட்டத்தில் முன்களத்தில் நிற்கின்றனர். இதனால் வருண் காந்தி, போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+