லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகநாடுகள் மத்தியில் இந்தியா மீது நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது; ராஜ்நாத் சிங் பெருமிதம்

Google Oneindia Tamil News

லக்னோ: இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 Indias reputation and credibility has increased among the world; Rajnath Singh is proud

உலக நாடுகள் மத்தியில் இந்தியா தொடர்ந்து முக்கிய கவனம் பெற்று வருவதாகவும், பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ராஜ்நாத்சிங்கின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் நிலைக்கு இந்தியா விரைவில் வளரும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உட்பட பிரதமர் மோடி வரை பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா 'விஷ்வ குருவாக' வளரும் என்றும் அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர் இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், "இந்தியாவின் நற்பெயரும் நம்பகத்தன்மையும் உயர்ந்து வருகிறது. பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டு மக்களிடம் பேசும்போது இந்தியா குறித்த எண்ணம் மேம்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தியா உலக நாடுகள் மத்தியில் உன்னிப்பான கவனத்தை பெற்று வருவதாகவும் அமைச்சர் ராஜ்நாத்த்சிங் கூறியுள்ளார். "அதேபோல கடந்த காலக்கட்டங்கிள் உலக நாடுகளின் அரங்குகளில் இந்தியா பேசும்போது அதை மற்ற நாடுகள் சீரியஸாக எடுத்துக்கொள்ளாது. தற்போது நிலைமை மாறியுள்ளது. நாம் உலகநாடுகளின் அரங்கில் பேசும்போது மக்கள் அதனை உன்னிப்பாக கவனிக்கின்றனர்" என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை தான்சானியா பாதுகாப்பு அமைச்சர் ஸ்டெர்கோமெனா லாரன்ஸ் வரியை சந்தித்திருந்தார். இரு தரப்பு பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், "தான்சானியாவை ஒரு மேற்கு பகுதியின் பெரிய இந்தியப் பெருங்கடல் வீரராக இந்தியா கருதுகிறது" என்று அமைச்சர் குறிப்பிட்டு கூறியிருந்தார். தற்போது இதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட கருத்தை அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
(உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளதாக ராஜ்நாத்சிங் பேச்சு): Union defence minister Rajnath Singh lauded the rise in the country's reputation and credibility across the world and said India's taken more seriously at the global level now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X