Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லக்கிம்பூர் வன்முறை: பிரசாந்த் கிஷோர் பயன்படுத்திய வார்த்தை... ஆடிப்போன காங்கிரஸ் கொடுத்த பதிலடி

பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளது என்று பிரசாந்த் கிஷோர் பதிவிட்டுள்ள ட்வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. கட்சிக்கு அவரது சான்றிதழ் தேவையில்லை என்று உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்து தலைமைப் பொறுப்பை ஏற்க போகிறார் பிரசாந்த் கிஷோர் என்று பேசப்பட்டு வந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து இருப்பதும் அதற்கு காங்கிரஸார் பதிலடி கொடுத்திருப்பதாலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Lakhimpur Kheri violence: Prasanth Kishores tweet against Congress

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியில் தான் இணைவது என்றால் எல்லா அதிகாரங்களையும் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்பை தனக்கு அளிக்க வேண்டும் என்று அவர் தலைமையிடம் கேட்டுக்கொண்டதாக கட்சிக்குள் சலசலப்பு எழுந்தது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு காட்டி வந்ததால் கட்சித் தலைமை பிரசாந்த் கிஷோருக்கு எல்லா அதிகாரங்களையும் முடிவெடுக்கும் பொறுப்பை அளிக்க மறுத்தது என்றும் செய்திகள் வெளிவந்தன. இதனால் பிரசாந்த் கிஷோர் உடனான பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டு விட்டது என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி சென்றார். அவர் விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுத்து மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதனால் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. அதன்பின்னரே அவர் விவசாயிகளை சந்திக்க அனுமதி அளித்தது உத்தரப்பிரதேச அரசு . இதனையடுத்து ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் லக்கிம்பூர் கேரி சென்று விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

லக்கிம்பூர் சம்பவத்தில் காங்கிரஸின் அணுகுமுறை குறித்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், லக்கிம்பூர் சம்பவத்துக்குப் பிறகே எதிர்க்கட்சிகள் பழம்பெரும் கட்சியின் தலைமையில் விரைவாக, தானாக மீண்டெழ வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் இதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க தீர்வு எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் செய்து பணியாற்றி வருகிறார். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் சேர்ப்பது நல்ல பலன் அளிக்கும் என்று கட்சிக்குள் ஒருதரப்பினர் தெரிவித்தனர். கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யாமல் உழைக்காமல், பிராசாந்த் கிஷோர் வருவதை சோனியா காந்திக்குக் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த ஜி 23 மூத்த தலைவர்கள் பலர் விரும்பவில்லை.

.கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பிரசாந்த் கிஷோர் தேர்தல் களத்தில் பணியாற்றியபோது எந்தவிதமான முரண்பாடும் ஏற்படவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி செயல்படும் விதம் குறித்தும், காலத்துக்கு ஏற்ப மாறாதது குறித்தும் கிஷோர் விமர்சித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் மிகப்பழமையான கட்சி என்ற வார்த்தையைப் ட்விட்டரில் பயன்படுத்தி பிராசந்த் கிஷோர் குத்தியது அந்தக் கட்சியை சீண்டி விட்டது.

இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, "கட்சிக்கு அவரது சான்றிதழ் தேவையில்லை" என்று கூறினார். மேலும், பிரசாந்த் கிஷோர் அரசியல்வாதி அல்ல என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு அவரது சான்றிதழ் தேவையில்லை. எங்களுக்கு உத்தரபிரதேச மக்களின் ஆசிர்வாதம் தேவை, அவ்வளவுதான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின், முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை அரசியல் ஆலோசகரத்தான் இன்னும் பிரசாந்த் கிஷோர் பணியில் இருக்கிறார். சமீபத்தில் கோவா முன்னாள் முதல்வர் லூசின்ஹோ பெலிரியோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரின் இணைவுக்குக்கூட பிரசாந்த்கிஷோர் பங்கு அதிகம் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு கோவா சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பெலிரியோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

ட்விட்டரில் பிரசாந்த் கிஷோருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வார்த்தைப்போர் வெடித்து வருகிறது. இதன் மூலம் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இப்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையேயான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவே தெரியவருவதால் அவர் அந்தக்கட்சியில் சேர்வதற்கான வாய்ப்பு குறைவுதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+