இப்படி நடுங்குதே..அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட! கல்யாணத்தை பாதியில் நிறுத்திய மணப்பெண்! இதுதான் காரணம்
லக்னோ : உத்திர பிரதேசம் மாநிலத்தில் தாலி கட்டும் வரை சென்று திடீரென திருமணத்தை நிறுத்தி இருக்கிறார் மணப்பெண். திருமணத்தை நிறுத்துவதற்காக அவர் சொன்ன காரணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அப்படி என்னதான் நடந்தது?
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் சில நேரங்களில் தாலி கட்டுவதற்கு முன்னதாக திருமணங்கள் நின்று போவதும் உண்டு அப்படி பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.
மணமகனுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது.. கடைசி நேரத்தில் ஓடிப்போன மணமகள்.. என பல காரணங்களால் திருமணம் நின்று போய் இருக்கலாம். அது தொடர்பான செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் தற்போது உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றிருக்கும் சம்பவம் மிகவும் வித்தியாசமானது.

திருமணம்
உத்திரபிரதேசத்தில் பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த துர்காபூரில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பபினா சாரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நேற்று இருவிட்டு உறவினர்களும் இணைந்து திருமண சடங்குகளை தொடங்கி இருக்கின்றனர். மதிய உணவுக்குப் பிறகு ஊர்வலமும் நடைபெற்றிருக்கிறது.

மச்சானுக்கு வந்த டவுட்
அதிகாலை திருமணத்திற்காக நள்ளிரவில் திருமண சடங்குகளும் முடிவடைந்து உள்ளது. அப்போதுதான் மணமகனின் மச்சான் அதாவது மணமகள் அண்ணனுக்கு திடீரென்று சந்தேகம் ஒன்று முளைத்துள்ளது. எல்லாவற்றையும் விசாரித்தோம் மணமகனுக்கு எழுதப்படிக்க தெரியுமா என விசாரிக்காமல் விட்டு விட்டோமே என நினைத்த அவர் அதனை கண்டுபிடிப்பதற்காக சோதனை ஒன்றை வைத்து இருக்கிறார். அதாவது சுமார் 2,100 ரூபாய் பணத்தை பத்து ரூபாய் நோட்டுகளாக திருமணத்திற்கு வந்திருந்த புரோகிதரிடம் கொடுத்து அவர் மணமகனை எண்ணி கொடுக்கும் படி சொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

பணம் எண்ன தெரியாது
புரோகிதர் அதனை மணமகனிடம் கொடுக்க பணத்தை வாங்கிய மணமகன் என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். பணத்தை எண்ணி எவ்வளவு இருக்கிறது என்று சொல்லுங்கள். அதுதான் முக்கியமான சடங்கு எனக் கூறியிருக்கிறார். கையில் பணத்தை வாங்கியவுடன் அவருக்கு நடுங்க ஆரம்பித்து விட்டது. அப்போதுதான் தெரிந்திருக்கிறது மணமகனுக்கு பணத்தைக் கூட என்ன தெரியாது என்பது. இதனால் மணமகளும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணம் ரத்து
எல்லாவற்றிற்கும் மேலாக பணத்தை என்ன கூட தெரியாத மணமகனை நான் எப்படி திருமணம் செய்து கொள்வது என்று கூறி மணமகள் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் திருமணத்துக்காக ஏராளமான பணத்தை செலவு செய்த மனமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நேரம் தான் ஆனதே தவிர மணமகள் படிக்காத மணமகனை திருமணம் செய்து கொள்ளவே முடியாது என மறுத்துள்ளார்.

பாவம் மணமகன்
எவ்வளவோ பேசியும் பலன் அளிக்காத நிலையில் இறுதியாக திருமணம் ரத்து செய்யப்பட்டது. மணமகன் படிக்காதவர் அவரது பின்னணியையே குடும்பத்தினர் மறைத்து விட்டனர் என மணமகளோடு சேர்ந்து கொண்டு மணமகளின் தாயார் பஞ்சாயத்து செய்ய தற்போது அந்த திருமணம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் பலர் அந்த மணமகன் பாவம், மேடை வரை வந்து திருமணத்தை ரத்து செய்வதை முன்னமே விசாரித்திருக்கலாமே என பலரும் கருத்திட்டு வருகின்றனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications