பெரும் பதற்றம்.. பூதாகரமாகும் எடுக்கும் கிருஷ்ணஜென்ம பூமி! உபி ஈத்கா மசூதியை அளவிட நீதிமன்றம் ஆணை
லக்னோ: பாபர் மசூதியை ராமஜென்ம பூமி என்று உரிமைகோரி வந்த இந்துத்துவ அமைப்புகள், மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை கிருஷ்ண ஜென்ம பூமி என்று உரிமைகோரி வரும் நிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை போல் ஈத்கா மசூதியிலும் அதிகாரப்பூர்வ அளவீட்டை நடத்த மதுரா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
முகலாய மன்னர் பாபரால் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பழம்பெரும் பாபர் மசூதியை ராம ஜென்ம பூமி என்று இந்துத்துவ அமைப்புகள் உரிமை கோரி வந்தனர். இதனை தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இந்துத்துவாவினரால் தகர்க்கப்பட்டது.
இதன் காரணமாக நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. இந்த நிலையில் பாபர் மசூதி நிலத்தை ராம ஜென்ம பூமி அரக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு கோயிலுக்காக பாபர் மசூதி நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட்டது.

அடுத்த மசூதிகளுக்கு குறி
இந்த தீர்ப்பு வெளியான உடனே தங்களின் அடுத்த இலக்கு என சில மசூதிகளை பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் சுட்டிக்காட்டி வந்தன. அதில் முக்கியமாக பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள ஞான்வாபி மசூதியையும், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஈத்கா மசூதியையும் அவர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

ஞானவாபி மசூதி
அதை மெய்பிக்கும் வகையில் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் அவர்களால் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வாரணாசி நீதிமன்ற உத்தரவின்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு அதில் சிவலிங்கம் போன்ற வடிவம் இருந்ததாக கூறி அதற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈத்கா மசூதி
இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள 17 ஆம் நூற்றாண்டில் முகலாய அரசர் அவுரங்கசீபால் கட்டப்பட்ட பழமையான ஈத்கா மசூதி இருக்கும் இடம் கிருஷ்ணர் பிறந்தது எனக்கூறி இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவரால் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தொல்லியல்துறை ஆய்வுக்கு உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறது. ஜனவரி 2 ஆம் தேதி தொல்லியல் துறை ஆய்வுக்கு ஆணையிட்ட மதுரா நீதிமன்றம், ஜனவரி 20 ஆம் தேதி ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அன்றைய தினம் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்து உள்ளது.

மதுராவில் பதற்றம்
கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், இந்த மதுரா ஈத்கா மசூதியில் அகில பாரதிய இந்து மகா சபா அமைப்பு, ஹனுமன் சலிசா பாடலை பாடுவதற்கு அழைப்பு விடுத்தது. இதனை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மதுராவில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications