Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலுக்குப் பிறகு யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி.. ஆனா அவங்க கூட மட்டும் இல்ல.. பளீர் பிரியங்கா

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்திரப்பிரதேச தேர்தலுக்குப் பிறகு பாஜகவை தவிர்த்து எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது தனித்து தான் போட்டி என உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய வட மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவை தவிர மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களும் தேர்தல்களை எதிர்கொள்ளப் போகின்றன.

உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். இதற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

உத்திர பிரதேச தேர்தல்

உத்திர பிரதேச தேர்தல்

2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் களம் கண்கிறார் யோகி.தற்போது ஆளும் கட்சியான பாஜக ஆட்சி தக்க வைப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் , இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.

கட்சிகள் மும்முரம்

கட்சிகள் மும்முரம்

தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது. பிரச்சாரங்கள், வேட்பாளர் தேர்வு என மும்முரம் காட்டி வருகின்றனர்.

தேர்தலுக்கு பின் கூட்டணி

தேர்தலுக்கு பின் கூட்டணி

இந்த நிலையில் தற்போது தனித்துப் போட்டியிடுவதாகவும் தேர்தலுக்குப் பிறகு பாஜகவை தவிர்த்து எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநில தேர்தல் வியூகங்கள் குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ப்ரியங்கா காந்தி, அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணியை பொருத்தவரை பாஜகவுக்கு இந்த கதவு மூடப்பட்டு உள்ளது எனவும் மற்ற கட்சிகள் விரும்பினால் கைகளை உயர்த்தலாம் என கூறினார். உத்தரப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் கேள்வி குறித்து பதில் அளித்த அவர் நீங்கள் ஏன் என்னிடம் இந்த கேள்வியை அடிக்கடி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை மற்ற மாநில தேர்தல் பொறுப்பாளர்களிடமும் இந்த கேள்வியை கேட்கிறீர்களா என பேசிய அவர் கூட்டணி குறித்து எந்தவிதமான விவாதத்திற்கும் தயாராக இருக்கிறோம் என்றார்.

தேர்தலில் தனித்து போட்டி

தேர்தலில் தனித்து போட்டி

தற்போதைய நிலவரப்படி உத்தரப் பிரதேச தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறிய பிரியங்கா காந்தி, இது ஒரு வகையில் எங்கள் கட்சிக்கு நல்லது எனவும் நாங்கள் நீண்ட காலமாக உத்தரபிரதேசத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிடவில்லை எனவும், சமாஜ்வாடி கட்சியும் பாஜகவும் ஒரு சதுரங்கப் பலகையில் விளையாடுவதால் இருவரும் ஒரே மாதிரியான அரசியல் ஆதாயம் அடைகின்றனர் என்றார். நாங்கள் முழு பலத்துடன் தேர்தலை எதிர் கொள்கிறோம் பெண்களின் பாதுகாப்பு மேம்பாடு வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றிற்காக காங்கிரஸ் போராடி வருகிறது இதன் காரணமாக மக்களின் ஆதரவை பெறும் என நம்புகிறோம் எனவும் பிரியங்கா காந்தி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+