சாலை திறப்பு விழாவில் தேங்காய் உடைத்த எம்.எல்.ஏ.. அப்புறம் நடந்ததுதான் வினோத ட்வீஸ்ட்.. இதை படிங்க!
லக்னோ: அரசு சார்பில் புதிய கட்டிடங்கள், புதிய சாலை திறப்பு விழாவின்போது அந்த தொகுதியின் எம்.பி அல்லது எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வது வழக்கம். உத்தரபிரதேசத்தில் சாலை திறப்பு விழாவில் எம்.எல்.ஏ பங்கேற்றபோது அதில் நடந்த வினோத சம்பவத்தைதான் இப்போது பார்க்க போகிறோம்.
உத்தரபிரதேச மாநிலம் ஜ்னோர் சதார் தொகுதியின் கெடா கிராமத்திற்கு அருகே 7 கி.மீ. நீளமுள்ள புதிய சாலை அமைக்கப்பட்டது. ரூ.1.16 கோடி செலவில் இந்த புதிய சாலை அமைக்கப்பட்டது/. இதனை தொடர்ந்து புதிய சாலை திறப்பு விழா நடந்தது.

புதிய சாலை உடைந்தது
ஜ்னோர் சதார் தொகுதியின் எம்.எல்.ஏ சுசி மவுசம் சவுத்ரி இந்த விழாவில் கலந்து கொண்டார். திறப்பு விழாவின் போது, அவர் சாலையில் தேங்காய் உடைத்தார். அப்போதுதான் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த தேங்காய் உடைந்ததோ இல்லை; தேங்காய் உடைத்ததில் புதிய சாலை உடைந்தது.

எம்.எல்.ஏ கோபம்
ரூ.1 கோடி கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை தேங்காவால் உடைந்தது பார்த்து எம்.எல்.ஏ சுசி மவுசம் சவுத்ரியும் கடுமையாக அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மண்வெட்டியைப் பயன்படுத்தியபோது, மேற்பரப்பு சிதையத் தொடங்கியது. இதனால் கடும் கோபமடைந்த அவர் அதிகாரிகளை வரவழைத்து மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வு செய்ய கோரினார். சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் யார் என்று கடுமையாக கேட்டறிந்தார்.

பணிகள் தரமானதாக இல்லை
இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. சுசி மவுசம் சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், தேங்காய் உடைக்க முயன்றபோது சாலையின் சிறு துண்டுகள் சிதறி வெளியேறியது பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
கட்டுமானத்தில் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தேன். பணிகள் தரமானதாக இல்லை. திறப்பு விழாவை நிறுத்திவிட்டோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசினேன்.

அடுத்த ஆண்டு தேர்தல்
3 பேர் கொண்ட குழு அமைத்து சாலையின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தரமற்ற சாலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 'உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் அவசரம், அவசரமாக இந்த சாலை அமைக்கப்பட்டது. இதனால் பதவியேற்பு நிகழ்வை அதிகாரிகள் அவசரப்படுத்தியிருக்கலாம். நல்லவேளையாக தேங்காய் யாருடைய தலையிலும் படவில்லை' என்று உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications