லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரா கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு வழிபாடு.. முண்டியடித்த கூட்டம்.. மூச்சுத்திணறி 2 பக்தர்கள் பலி!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பன்கே பிஹாரி கோவிலில் நள்ளிரவு நடந்த சிறப்பு வழிபாட்டை காண ஏராளமான பக்தர்கள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Recommended Video

    Lord Krishnar Heart | இன்றும் துடிக்கும் Krishnar இதையம் | Puri Jaganath Temple

    நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் மதுராவிலும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்துக்களின் கடவுள்களில் ஒருவரான கிருஷ்ணன் பிறந்த இடமாக இந்த மதுரா கருதப்படுகிறது.

    கூட்டத்தில் ஒலித்த 2 குரல்கள்.. 'திடீர் ஷாக்’.. அதிர்ச்சியோடு பார்த்த எடப்பாடி - ஸ்ட்ரைட்டா மெசேஜ்! கூட்டத்தில் ஒலித்த 2 குரல்கள்.. 'திடீர் ஷாக்’.. அதிர்ச்சியோடு பார்த்த எடப்பாடி - ஸ்ட்ரைட்டா மெசேஜ்!

     ஆக்ராவில் இருந்து 50 கி.மீட்டர்

    ஆக்ராவில் இருந்து 50 கி.மீட்டர்

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ஆக்ராவில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள பன்கே பிஹாரி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குறிப்பாக கோவிலில் நள்ளிரவு நடந்த சிறப்பு வழிபாட்டை காண ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.

     மூச்சு விட முடியாமல் திணறினர்

    மூச்சு விட முடியாமல் திணறினர்

    தொடர்ந்து கோவிலில் மங்கள ஆரத்தி நிகழ்வின் போது, பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கோவில் வளாகத்திற்குள் செல்ல முற்பட்டதாக தெரிகிறது. இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் பலரும் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றதால் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு விட முடியாமல் திணறினர். இதில் சில பக்தர்கள் அப்படியே மயங்கி கீழே சுருண்டு விழுந்தனர்.

     2 பக்தர்கள் பலி

    2 பக்தர்கள் பலி

    ஒருவர் இருவர் அல்ல... ஒரு 6 அல்லது 7 பேர் மயங்கி விழுந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒரு ஆண் பக்தரும் பெண் பக்தர் ஒருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதேபோல் மேலும் 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    இதற்கிடையே சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்கள் நிர்மலா தேவி, ராம் பிரசாத் ஆகிய இருவர் என்று போலீசார் தெரிவித்தனர். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியானதால், அங்கு பெரும் சோகம் ஏற்பட்டது.

    English summary
    Two devotees were killed in a stampede at Panke Bihari temple in Uttar Pradesh's Mathura after a large number of devotees thronged to witness a special midnight ritual. 6 others were seriously injured.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X