திருமண நிதிக்காக தங்கையை மணமுடித்த இளைஞர் .. ஆப்பு வைத்த அதிகாரிகள்
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாநில அரசின் திருமண நிதி உதவி பணத்தைப் பெறுவதற்காக இளைஞர் ஒருவர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்ய மந்திரி சமூஹிக் விவாஹ் யோஜனா எனப்படும் முதலமைச்சரின் சமூக திருமண நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசு திருமணம் செய்யும் ஒவ்வொரு தம்பதிக்கும் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பரிசுகளாக வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின்படி மக்களின் வங்கிக் கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் மற்றும் தம்பதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

திருமண நிதியுதவி
குறிப்பாக மணமகள் விதவையாகவோ அல்லது விவாகரத்து பெற்றவராக இருந்தால் அவரது கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 5,000 ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் திட்டத்தை பெறுவதற்காக இளைஞர் ஒருவர் தனது சொந்த சகோதரியை திருமணம் செய்த சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெகுஜன திருமணம்
உத்தரப் பிரதேசத்தில் ஃபெரோஷாபாத்தில் சமூக நலத்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த வெகுஜன திருமண நிகழ்வு பிளாக் டெவலப்மன்ட் அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த ஒரு ஜோடியின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கிராம மக்கள் உதவியுடன் அதிகாரிகள் சரி பார்த்தனர்.

மணமக்கள் ஆன தங்கை
அப்போது திருமண நிகழ்வுக்காக வந்திருந்த ஒரு ஜோடி அண்ணன் தங்கை என்பது தெரிய வந்தது இதுகுறித்து அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டியதை அடுத்து அந்த நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மோசடி
அரசாங்க திட்டத்தின் பலன்களை பெறுவதற்காக போலி ஜோடிகள் திருமண நிகழ்வில் கலந்து கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் பணப் பலன்களை பெற ஏற்கனவே திருமணமான 12 ஜோடிகள் ஷாம்லியில் மீண்டும் திருமணம் செய்து கொண்டதும் இதையடுத்து அதிகாரிகள் கண்டுபிடித்து அவர்களை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications