லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் படித்து வந்த 20 வயது மாணவி.. உபியில் நடந்த கொடூர "செக்ஸ் டார்ச்சர்".. நடுரோட்டில் பலி

சாலையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

லக்னோ: டூவீலரிலேயே... நடுரோட்டில் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார்கள்.. இதனால் விபத்து ஏற்பட்டு, அந்த பெண் தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் உபியில் நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் கவும்தம்புத்நகர் மாவட்டம் தாத்ரி என்ற பகுதியை சேர்ந்தவர் சுதிக்ஷா.. இவருக்கு 20 வயதாகிறது.. ரூ.4 கோடி உதவித்தொகையுடன் அமெரிக்காவிலுள்ள பாப்சன் காலேஜில் படித்து வருகிறார்.

இப்போது கொரோனா காலம் என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார்.. நேற்று இவர் தன்னுடைய மாமா சத்யேந்தருடன் புலந்த்ஷெரில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றுவிட்டு, டூவீலரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

மூணாறு.. சோறு தண்ணி இல்லாமல் 5 நாளாக எஜமானரை தேடும் நாய்.. ஒவ்வொரு உடலையும் பார்த்து ஏமாறும் சோகம் மூணாறு.. சோறு தண்ணி இல்லாமல் 5 நாளாக எஜமானரை தேடும் நாய்.. ஒவ்வொரு உடலையும் பார்த்து ஏமாறும் சோகம்

 படுகாயம்

படுகாயம்

அப்போது திடீரென விபத்து ஏற்பட்டு, பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டார் சுதிக்‌ஷா.. இதில் தலை குப்புற தரையில் பட்டு, படுகாயமடைந்து, அவர் இறந்தும்விட்டார். இந்த விபத்து பாலியல் துன்புறுத்தல் சம்பவமாக வெடித்துள்ளது.. இதற்கு காரணம், பைக்கில் சுதிக்‌ஷா சென்றபோது, புல்லட்டில் 2 இளைஞர்கள் ஃபாலோ செய்தவாறே வந்திருக்கிறார்கள்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

அப்போது சுதிக்‌ஷாவை அசிங்கமா பேசி கேலி செய்துள்ளனர்.. ஆனால் அவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் சுதிக்‌ஷா இருந்திருக்கிறார்.. திரும்பி கூட பார்க்கவில்லை.. இதனால் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக, அந்த 2 இளைஞர்களும் புல்லட்டிலேயே சாகசம் காட்டி இருக்கிறார்கள். பிறகு அருகில் வந்து மிரட்டியும் இருக்கிறார்கள்.. இதனாலேயே அந்த கவனம் சிதறி விபத்து ஏற்பட்டு உயிர் காவு வாங்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

 பைக்

பைக்

இது குறித்து புலந்த்ஷெர் நகர போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. சம்பவம் குறித்து சொல்லும்போது, "பைக்கில் சுதிக்‌ஷா சென்று கொண்டிருந்திருக்கிறார்.. பின்னாயே ஒரு வந்த புல்லட் மோதி இறந்துவிட்டார்... அவரது சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. ஆனால், அவர்கள் பெற்றோர், பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக சொல்கிறார்கள்.. எங்களுக்கு அதை பற்றி ஒரு புகாரும் இதுவரை வரவில்லை" என்றனர்.

கொலை

கொலை

ஆனால், சுதிக்‌ஷா குடும்பத்தினரோ, போலீசார்தான் இந்த வழக்கு பற்றி இதுவரை எதையும் பதிவு செய்யவில்லை.. எங்களை தொடர்பு கொள்ளவுமில்லை... இதை விபத்து என்கிறார்கள்.. ஆனால் உண்மை அதுகிடையாது.. இது கொலை.. அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் நேரில் பார்த்தவர்களுக்கும் இது தெரியும்" என்கின்றனர்.

 உதவித்தொகை

உதவித்தொகை

சுதிக்‌ஷாவின் குடும்பம் ரொம்ப சாதாரணமானது.. இவரது அப்பா ரோட்டோரம் தாபா ஒன்றை நடத்தி வருகிறார். சுதிக்‌ஷா நன்றாக படிப்பாராம்.. பட்டப்படிப்பிற்காக ரூ.3.8 கோடி உதவித்தொகையை பெறும் அளவுக்கு கெட்டிக்காரராக இருந்திருக்கிறார்.. இவ்வளவு நாள் அமெரிக்காவில் நிம்மதியாக படித்து கொண்டிருந்தவர், இந்த கொரோனா வந்துவிடவும், நாடு திரும்பி உள்ளார்.. இந்த நேரத்தில்தான் அவரது உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது.

மாயாவதி

மாயாவதி

இது கொலையா, விபத்தா என போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இதனிடையே இந்த சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். "இதுபோன்ற சம்பவங்களால் உபியின் பெண்களால் எப்படி முன்னேற முடியும்? சுதிக்‌ஷா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உபி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ட்வீட் போட்டு கண்டனம் சொல்லி உள்ளர்.. அதேபோல எதிர்க்கட்சிகளும் சுதிக்‌ஷா மரணத்தை கையில் எடுத்து அம்மாநில அரசை விளாசி வருகின்றன.

English summary
american student killed in road accident in uttar pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X