லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உபி சட்டப்பேரவையில் ரம்மி, புகையிலை.. பாஜக எம்எல்ஏ-க்கள் செய்யும் செயலை பாருங்க.. அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையை பாஜக எம்எல்ஏ-க்கள் பொழுதுப்போக்கு மையமாக மாற்றிவிட்டனர் என்று சமாஜ்வாடி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளில் பாஜக வென்றதால், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகள் மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி வருகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி தரப்பில் ட்விட்டரில் இரு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நோட் பண்ணீங்களா! காங் தலைவர் தேர்தல் எல்லாம் சுத்த பொய்! இது நோட் பண்ணீங்களா! காங் தலைவர் தேர்தல் எல்லாம் சுத்த பொய்! இது

பாஜக எம்எல்ஏ வீடியோ

பாஜக எம்எல்ஏ வீடியோ

அந்த வீடியோக்கள், சட்டப்பேரவைக்குள் பாஜக எம்எல்ஏ-க்கள் செய்யும் சில அதிர்ச்சிகரமான செயல்களை வெளிக்காட்டியுள்ளது. அந்த வீடியோவில் பாஜகவின் மஹோபா தொகுதி எம்எல்ஏ-வான ராகேஷ் கோஸ்வாமி ஆன்லைன் ரம்மியை தீவிரமாக விளையாடிக் கொண்டுள்ளார். அப்போது சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசி வரும் நிலையில், அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

இந்த சத்தம் தெளிவாக கேட்கும் நிலையில், சட்டப்பேரவை செயல்படும் போதே ராகேஷ் கோஸ்வாமி ஆன்லைன் ரம்மி விளையாடி வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அரசியல் கட்சியினர் பேசி வரும் சூழலில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் சட்டப்பேரவைக்குள் ஆன்லைன் ரம்மி விளையாடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகையிலை போடும் எம்எல்ஏ

புகையிலை போடும் எம்எல்ஏ

அதேபோல் இன்னொரு வீடியோவில், உத்தரப் பிரதேசத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான ஜான்சி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ ரவி ஷர்மா, சட்டப்பேரவைக்குள் புகையிலை பயன்படுத்தும் காட்சிகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில், சட்டப்பேரவை மாண்பை கெடுக்கும் வகையில் பாஜக எம்எல்ஏ-க்கள் செயல்படுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமாஜ்வாடி கண்டனம்

சமாஜ்வாடி கண்டனம்

இதுகுறித்து சமாஜ்வாடி கட்சி தரப்பில், சட்டப்பேரவையின் முக்கிய அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பாஜக எம்எல்ஏ-க்கள் ரம்மி விளையாடியும், புகையிலை போட்டும் சபையின் கண்ணியத்தை கெடுத்து வருகின்றனர். மக்கள் பிரச்சினைகள் பற்றி கேள்வி எழுப்பினால், இவர்களிடம் எந்த பதிலும் இல்லை. ஆனால் பேரவையை ஒரு பொழுதுபோக்கு மையமாக மாற்றியுள்ளனர். இவர்களின் செயல் மிகவும் வெட்கக்கேடானது என்று சமாஜ்வாடி கட்சி தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Samajwadi Party has alleged that the BJP MLAs have turned the Uttar Pradesh state assembly into an entertainment centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X