வாரணாசியில் வைத்து.. மம்தாவுக்கு கறுப்பு கொடி காட்டிய பாஜக.. அனல் பறக்கும் உத்தரப்பிரதேசம்!
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக வாரணாசி வந்த மம்தா பானர்ஜிக்கு பாஜகவினர் கறுப்பு கொடி காட்டியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் 6வது கட்ட தேர்தல் இன்று நடந்துகொண்டிருக்கிறது.
7ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற்று, ஒரே கட்டமாக மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் சமாஜ்வாதியை ஆதரித்து இன்று வாரணாசியில் பிரசாரம் மேற்கொண்டார் மம்தா பானர்ஜி.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. அங்கு சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தேர்தல் என்பதால், உத்தரப்பிரதேச தேர்தலை நாடே உற்று நோக்கி வருகிறது.

மம்தா பேனர்ஜி
சமாஜ்வாதி கட்சியை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்கிறார். இன்று வாரணாசியில் அக்கட்சியை ஆதரித்து பேரணியில் கலந்து கொண்டார். அதற்கான கொல்கத்தாவில் இருந்து வாரணாசிக்கு விமானம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து பேரணி நடக்கும் இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கறுப்புக்கொடி
அப்போது மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பாஜகவினர் கறுப்புக்கொடி காட்டினர். அங்கிருந்து பேரணி நடக்கும் இடத்துக்கு வந்தார் மம்தா. அவர் பேசுகையில், ''நான் வந்த எல்லா இடத்திலும் எனக்கு கறுப்புக் கொடி காட்டினார்கள். அது எதிர்ப்புக் கொடி இல்லை. அவர்கள் இந்த தேர்தலில் தோற்கப்போவதற்கான பயத்தின் அறிகுறி.

சமாஜ்வாதி
அடுத்த பேரணியிலும் மம்தாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்ட பாஜகவினர் தயாரானதால், சமாஜ்வாதி கட்சியினர் அவருக்கு ஆதராவாக சாலைகளில் திரண்டனர். இரு தரப்பையும் போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர். மம்தா பானர்ஜி ஏற்கெனவே சமாஜ்வாதியை ஆதரித்து உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டார். தற்போது இரண்டாவது முறையாக பிரசாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications