எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அகிலேஷ் யாதவ்? - மிகப்பெரிய முடிவுக்கு காரணம் இதுவா?
லக்னோ: நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததால், கர்ஹால் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சி 2017ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மிக மோசமாக தோற்றது. அதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடுமையாக பிரசாரம் செய்தது சமாஜ்வாதி கட்சி. ஆனாலும் பாஜகவிடம் தோற்று, ஆட்சி அமைக்கமுடியாமல் போனது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், மற்ற நான்கு மாநிலத்தில் பாஜகவும் ஆட்சி அமைக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.

அகிலேஷ் யாதவ்
உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி கூட்டணி 403 தொகுதிகளில் 126 தொகுதிகளில் வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சி பலமாக உள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராஜினாமா
அகிலேஷ் யாதப் ராஜினாமா செய்கிறார் என்ற செய்தி கேட்டு அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். எம்.எல்.ஏவாக பதவி ஏற்கும் முன்னரே இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது. சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்காமல் தோற்றதால், இந்த முடிவை எடுப்பதாக சொல்லப்பட்டாலும், அதுமட்டுமே காரணம் இல்லை என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

காரணம் என்ன?
அகிலேஷ் யாதவ் தற்போது அஸாம்கர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். சட்டசபை உறுப்பினராக தன்னுடைய பயணத்தை தொடர விரும்பாத அகிலேஷ் யாதவ், அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகவே தொடர விரும்புகிறார் என்றும் தகவல்கள் வருகின்றன.

மம்தா பானர்ஜி
2024 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸுடன் சேர்ந்து சந்திக்க தயார் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்நிலையில் உத்தரப்பிரதேச தோல்வி கண்டு துவண்டுபோக வேண்டாம் என அகிலேஷ் யாதவுக்கு மம்தா ஆறுதல் கூறியுள்ளார். மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால், அதில் அகிலேஷ் யாதவ் முக்கிய நபராக இருப்பார். அதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாமல், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். பொதுத்தேர்தலை மனதில் வைத்து, இப்போதே அதற்கு தயாராகும் வேலையில் அகிலேஷ் யாதவ் இறங்கிவிட்டதாக அறியப்படுகிறது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications