பாஜக குஷ்புவுக்கு வந்த கோபம்.. "இப்படியா கொல்வது? மனித உயிர்களைவிட எதுவும் முக்கியமில்லை".. ஆவேசம்
உபியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்
லக்னோ: உபியில் போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜகவின் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்... "மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை... மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்'' என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு வருடமாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன..
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

எதிர்ப்பு
இந்நிலையில், லக்கிம்பூர் கேரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. இதில் உபி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்றார்.. ஆனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் செய்து வாகனத்தை முற்றுகையிட்டனர்... பிறகு விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

உயிரிழப்பு
கொஞ்ச நேரத்தில் இது வன்முறையாக மாறியது.... அப்போது, ஒரு ஜீப் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதுடன் நிற்காமல் சென்றது... இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.. இதனால் உபி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அந்த மாநில முதல்வர் யோகி உத்தரவிட்டு உள்ளார்.

காங்கிரஸ்
இதனிடையே, விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது... இதையொட்டி பல தலைவர்கள் தங்கள் கண்டனங்கடிளை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்துளளார்.. இது குறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.
|
குற்றம்
அதில், "உத்தரபிரதேசத்தில் 8 போராட்டக்காரர்களை கார் ஏற்றி கொன்றிருப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, எதையும் பொருட்படுத்தாமல், உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்... மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை... மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்'' என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications