லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உபி முதல்வரை காலி செய்துவிடுவேன்.. மெசேஜ் அனுப்பிய 15 வயது சிறுவன்.. அதிரடியாக கைது செய்தது போலீஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யா நாத்தை காலிசெய்துவிடுவேன் என மிரட்டியதாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருதத பள்ளியில் அடைத்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கிராமத்தில் 10ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவனின் குடும்பம் கடந்த வாரம் முழுவதும் உறவினரின் திருமணத்திற்குத் தயாராகி வந்தது. சிறுவன் உற்சாகமாக இருந்தான். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவன் தன் உறவினர்களைச் சந்திக்க உள்ளதால் மகிழ்ச்சியில் இருந்தார்.

வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீண்டும் வீட்டு வாசலில் ஒலித்த ஹாலிங் பெல் அவர்களின் சந்தோஷத்திற்கு சாவு மணி அடித்தது

போலீசார்

போலீசார்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை "காலி செய்துவிடுவேன்" என்று சிறுவன் மிரட்டியதாக கூறி அவனை அழைத்துச் செல்வதற்காக லக்னோவில் இருந்து போலீசார் வந்திருந்தனர்.

லக்னோ

லக்னோ

போலீசாரின் தகவலின் படி, சிறுவன் வாட்ஸ்அப் மூலம் மிரட்டலை மாநில உதவி எண் 112 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பியுள்ளார். டயல் 112க்கு வந்த மெசேஜை பார்த்த லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலைய போலீசார் கிரிமினல் மிரட்டல் குற்றச்சாட்டின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்கள்.

சிறை

சிறை

புகாரில் உள்ள எண்ணை கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் உ.த்தரப்பிரதேச காவல்துறையின் சைபர் செல் பிரிவு யாருடையது என்று கண்காணித்தது. 24 மணி நேரத்திற்குள், ஆக்ராவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தான் எஸ்எம்எஸ் அனுப்பியது என்பதை போலீசார் அடையாளம் கண்டனர். அவரைக் கைது செய்ய லக்னோவிலிருந்து இரண்டு பேர் கொண்ட குழு அனுப்பி வைத்தோம். ஒரு நாள் கழித்து சிறுவனை லக்னோவில் உள்ள சிறார் வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். சிறுவன் தற்போது லக்னோவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுளளார்" என்றார்கள்.

குடும்பம் அதிர்ச்சி

குடும்பம் அதிர்ச்சி

காவல்துறையினர் தங்கள் வீட்டிற்கு வந்து எஸ்எம்எஸை காண்பிக்கும் வரை புகாரை அறியாத குடும்பத்தினர், தங்கள் மகன் அமைதியானவன் என்று கூறினர். அதிக நேரம் விளையாடுவான். விளையாட்டு பையன். கைப்பந்து விளையாடுவதில் அதிக ஈடுபாடு உள்ளவன். 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார், நல்ல மாணவர், பள்ளியில் பல போடடிகளை பங்கேற்பான். அவன் மிகவும் சிறியவன். வெளி உலகத்தை அவன் பார்த்தது இல்லை. அவன் ஏன் அல்லது எந்த சூழ்நிலையில் அப்படி ஒரு மெசேஜ் அனுப்பினான் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் கிராமத்தில் உள்ள யாருக்கும் எந்த தீங்கும் எங்கள் மகன் செய்தது இல்லை. ஒரு கோபத்திலோ அல்லது கேலியாகவோ அப்படி அனுப்பியிருக்கலாம். எதற்காக அப்படி அனுப்பினான் என்பதை அவனிடம் பேசினால் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் எங்கள் பிள்ளை அழைத்துச் செல்லப்பட்ட விதம் மனது வலிக்கிறது என்று பாட்டி கூறினார்.

விளையாட்டு பிள்ளை

விளையாட்டு பிள்ளை

விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் ஒரு நாள் அரசு வேலை கிடைக்கும் என்று சிறுவன் நம்பியிருந்தான். ஒருவேளை மாநிலத்திற்காகவோ அல்லது நாட்டிற்காகவோ கைப்பந்து விளையாடுவார் என்று நம்பினோம். பத்தாம் வகுப்பு மாணவன் அரசின் எதிரியாக சித்தரிக்கப்படுகிறார். அவனை அழைத்து ஆலோசனை வழங்கி சரி தவறு என்று சொல்லி இருக்கலாமே என்று பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

வேதனை

வேதனை

சிறுவன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சிறுவன் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிறுவன் வீட்டிற்கு திரும்பி வர விரும்புவதாகவும் அவர்களிடம் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

போலீஸ் விளக்கம்

போலீஸ் விளக்கம்

புகாரை ஏற்று சிறுவனை கைது செய்த கோல்ஃப் சிட்டியின் சச்சின் குமார் சிங் கூறுகையில், "எஃப்.ஐ.ஆர் ஒரு போலீஸ்காரரால் தாக்கல் செய்யப்பட்டது, ஏனெனில் அந்த எஸ்எம்எஸ் முதல்வரைக் குறிப்பிட்டு, அதிகாரப்பூர்வ எண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அச்சுறுத்த வேண்டும் என்பதாக சிறுவன் செய்ததாக தோன்றவில்லை. எனினும் இப்போதைக்கு வழக்கு நிலுவையில் இருக்கிறது. விசாரித்து வருகிறோம் என்றார்.

English summary
Uttar pradesh cops take away 15-year-old for ‘threatening’ CM, family seeks answers. According to police, the boy had sent the threat by WhatsApp on the state's Dial 112 helpline number.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X