லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நைட்டில் கணவன், பகலில் மகன்.. கருணை கொலை செஞ்சுடுங்க! ஜனாதிபதிக்கு உ.பி இளம் பெண் "ஷாக்" கடிதம்

Google Oneindia Tamil News

லக்னோ: தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது மகனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு தலைக் காதல்.. கேரளாவில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இளம் பெண்.. இளைஞர் கைது.. பரபரப்பு வாக்குமூலம் ஒரு தலைக் காதல்.. கேரளாவில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இளம் பெண்.. இளைஞர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்

வளர்ப்பு மகன்

வளர்ப்பு மகன்

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்மணி ஒருவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் சண்டிகரை சேர்ந்தவரை நான் விவாகரத்து செய்தேன். பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். தற்போதுள்ள கணவருக்கு ஏற்கெனவே மகன் இருக்கிறார். இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல கொடுமைகள் தொடங்கின.

தாக்குதல்

தாக்குதல்

அவரது மகன் என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றான். நான் எவ்வளவோ தடுத்தும் என்னை கட்டயாப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்றும், வீட்டை விட்டு துரத்தப்படுவேன் எனவும் அவன் மிரட்டல் விடுத்திருந்தான். நாளடைவில் இது தொடர்கதையானது. விளைவாக நான் கர்ப்பமடைந்துவிட்டேன். பரிசோதனைக்கு செல்லும்போது ஈவு இரக்கமில்லாமல் நான் அவனால் தாக்கப்பட்டேன்.

கூட்டு பாலியல் பலாத்காரம்

கூட்டு பாலியல் பலாத்காரம்

பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பும் செய்யப்பட்டது. இந்த வன்கொடுமை ஒருபுறம் எனில் மறுபுறத்தில் எனது கணவரின் கொடுமையை தாங்க முடியவில்லை. கடந்த ஜூலை 18 அன்று கணவர் அவரது நண்பரின் பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தார். அங்கு அவரின் உறவினர் ஒருவர், சக ஊழியர்கள் இருவர் என நான் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். இதை எதிர்த்து காவல்துறையை நாடினேன் ஆனால் அவர்கள் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

கருணை கொலை

கருணை கொலை

பின்னர் நீதிமன்றத்தை நாடி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி பெற்றேன். இதனையடுத்து கடந்த 9ம் தேதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. நான் இப்போது எனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறேன். இந்த கொடுமையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீதியின் மீதான நம்பிக்கையும் போய்விட்டது. எனவே என்னை கருணை கொலை செய்திட தாங்கள் அனுமதிக்க வேண்டும்" என்று அதில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் எஸ்.பி தினேஷ் குமார் பிரபு கூறுகையில், "வழக்கு குறித்து நியாயமான முறையில் விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

English summary
A woman from Uttar Pradesh has written to the President permission for euthanasia after she was raped by her second husband and his stepson. He has written a letter even though he has lodged a complaint at the police station regarding this issue but no action has been taken. This incident has caused a great shock in the state. Many social activists have insisted that appropriate action should be taken regarding the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X